உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புர்கா அணிந்த பெண்களிடம் சோதனை: 7 போலீசார் சஸ்பெண்ட்

புர்கா அணிந்த பெண்களிடம் சோதனை: 7 போலீசார் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ,உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது, புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களிடம் போலீசார் அடையாள அட்டை கேட்டு சோதனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, சோதனையில் ஈடுபட்ட ஏழு போலீசாரை சஸ்பெண்ட் செய்து, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது.ஓட்டுப்போட வந்த, புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களிடம் அடையாள அட்டை கேட்டு, போலீசார் சோதனை நடத்தியதாக, எதிர்க்கட்சியான சமாஜ்வாதி குற்றஞ்சாட்டியது.இது தொடர்பாக, அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமூக வலைதளத்தில் வீடியோவுடன் பதிவிட்டிருந்தார். அதில், 'வாக்காளர்களின் அடையாளத்தை தேர்தல் அதிகாரிகள் மட்டுமே சோதனை செய்ய முடியும். ஆனால், போலீசார் அடையாள அட்டை காட்டும்படி கூறி, ஓட்டளிக்க விடாமல் மிரட்டுகின்றனர்' என, குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக, தேர்தல் கமிஷனிலும், அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் சுக்லா கூறுகையில், ''வெளி மாநிலங்களில் இருந்து சமாஜ்வாதி ஆட்களை வரவழைத்துள்ளது. புர்கா அணிந்த சில பெண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையுடன் அவர்களுடைய முகம் ஒத்துப் போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது,'' என, கூறிஉள்ளார்.இந்நிலையில், இந்தப் புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு, மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அடையாள அட்டைகளை சரிபார்த்ததாக புகார் கூறப்பட்ட, ஏழு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ravi Chandran
நவ 23, 2024 10:51

சோதனை செய்தது சரியே


Ravi Chandran
நவ 23, 2024 10:47

சோதனை செய்தாலும் தவறு. சொத்தை செய்யாமல் விட்டாலும் தவறு. என்னங்கடா உங்கள் சட்டம்


K r Madheshwaran
நவ 22, 2024 13:35

அவர்களுக்கு இதெல்லாம் ஒரு இடைஞ்சல் அது அவர்களின் தலையெழுத்து அதற்கு நாடு நடுத்தர இந்து மக்கள் பாதிக்கிறார்கள் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று


Ramesh Kumar
நவ 22, 2024 12:06

Fantastic


sankaran
நவ 21, 2024 17:47

குண்டு வெடித்தால் போலீஸ் மற்றும் உளவுத்துறை மேல் பழி .. செக் பண்ணினால் சஸ்பெண்ட் ...


TSelva
நவ 21, 2024 16:12

புர்கா அணிந்தவர்கள் கட்டாயமாக சோதனை செய்யப்பட வேண்டும். எதையும் மறைப்பதற்கும் ஆள் மாறாட்டம் செய்வதற்கும் வாய்ப்பை அளிப்பது புர்கா.அவர்களை விட்டுவிட்டு மற்றவர்களை சோதனை செய்வது ஒருதலைபட்சமானது ஆகும்


TSelva
நவ 21, 2024 16:02

புர்கா அணிந்தால் சோதனைக்கு அப்பார்பட்டவர்கள் ஆனால் மற்றவர்கள் சோதனைக்கு கட்டுப்பட்டவர்கள் என்றால் இது ஒரு பட்டசமான துன்புறுத்தல் தான்.


LANIAKEA
நவ 21, 2024 16:00

இருக்கற கொஞ்ச நெஞ்ச நல்லா போலீஸ்யம் இப்படி சஸ்பென்ஷன் கொடுத்து அனுப்புறானுங்க...நல்லா இருக்குடா உங்க சட்டம்


sankar
நவ 21, 2024 14:40

சரிபார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது - புர்கா அணிந்து ஒரு தீவிரவாதி வந்தால் அனுமதிக்கலாமா சார்


Anonymous
நவ 21, 2024 10:33

இது இந்தியா தானா? இல்லே வேறு ஏதாவது இஸ்லாமிய நாட்டுல நாம இருக்கோமா ?


சமீபத்திய செய்தி