மேலும் செய்திகள்
ஆட்டோ - லாரி மோதல்: பெண் பலி
15-Jul-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, பஸ் - ஆட்டோ நேருக்குநேர் மோதிக்கொண்டதில், இருவர் உயிரிழந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு தச்சம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்குட்டி, 62. பேப்பர் கவர் உற்பத்தி செய்யும் இவர், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த அசீஸ், 50, என்பவரின் ஆட்டோவில், சிறக்கல்படி பகுதியில் இருந்து பாலக்காட்டிற்கு சென்றார்.எடாய்க்கல் பகுதியில், பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற அரசு பஸ், ஆட்டோ மீது நேருக்கு நேராக மோதியது. இதில் படுகாயமடைந்த ஐயப்பன்குட்டி, அசீஸ் ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மண்ணார்க்காடு போலீசார், இருவரின் சடலத்தை மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து மண்ணார்க்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
15-Jul-2025