உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜன.,5 முதல் பஸ் கட்டணம் உயர்வு : கர்நாடகா அரசு அறிவிப்பு

ஜன.,5 முதல் பஸ் கட்டணம் உயர்வு : கர்நாடகா அரசு அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஜன.,5 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.இந்த பஸ் கட்டண உயர்வு, இன்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதில் 15 சதவீத அளவுக்கு பஸ் கட்டணத்தை உயர்த்தலாம் என்ற முடிவை மாநில அமைச்சரவை எடுத்தது.கர்நாடகா மாநிலத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி., மூலம் தொலைதூர பஸ்களும் பி.எம்.டி.சி மூலம் பெங்களூரு மாநகர பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதுதவிர வடமேற்கு கர்நாடகா, கல்யாண் கர்நாடகா என இரண்டு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கே.எஸ்.ஆர்.டி.சி மற்றும் பி.எம்.டி.சிஆகிய இரண்டு போக்குவரத்து கழகங்களும் கடந்த மூன்று மாதங்களில் 295 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது.தற்போதைய நஷ்டத்தை சமாளிக்க 15 சதவீத அளவிற்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.இதனை தொடர்ந்து பஸ் கட்டண உயர்வுக்கு இன்று மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 15 சதவீதம் பஸ் கட்டண உயர்வால் கூடுதலாக, தினமும் ரூ.7.84 கோடியும்,மாதத்திற்கு என்று பார்த்தால் ரூ.74.85 கோடியும் அரசுக்கு கிடைக்கும். இந்த பஸ் கட்டண உயர்வுக்கு மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த பஸ் கட்டண உயர்வால் மக்களுக்கு பெரும் சுமை ஏற்படும் என்றார்.மாநில பா.ஜ., தலைவரும் எதிர்கட்சி தலைவருமான அசோகா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாளுக்கு நாள் ஒரு விலையை உயர்த்தி மக்கள் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அரசின் பேராசையின் காரணமாக வயிற்றை நிரப்ப கன்னடர்கள் இன்னும் எத்தனை வரிகளும் கட்டணங்களும் செலுத்த வேண்டும்' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohan
ஜன 02, 2025 23:39

கன்னட மக்களுக்கு காங்கிரஸ் அரசின் புத்தாண்டு போனஸாக பஸ் கட்டண உயர்வு கன்னடர்களே உங்கள் மனைவி மற்றும் பெண்குழந்தைகளுக்கு பஸ்களில் இலவச பயணம் தந்த காங்கிரஸ் அரசு எப்படி அதனை தரும் என யோசிக்காமல் ஓட்டு போட்டதன் பலன் கைமேல்.மக்களே அரசுகள் தருவதாக சொல்லும் இலவசங்கள் உங்கள் மடியிலிருந்தும் உங்கள் சம்பாத்தியத்திலிருந்தும் தான் தரப்படும். இதற்கு மாறாக அரசுகள் போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்தும் டீசல் மீதான வரியை முழுவதும் நீக்குதல், மற்றபடி அங்கு நடக்கும் பாடி பில்டிங்,சீட் பொருத்துதல்,டயர்மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றில் நடக்கும் ஊழலை ஒழித்தாலே போக்குவரத்து கழகங்கள் பெரிய லாபத்தில் ஓடும்


Ramesh Sargam
ஜன 02, 2025 22:04

அடுத்து மில்க் கட்டண உயர்வு ..


முக்கிய வீடியோ