பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பட்காம் பகுதிக்கு பாதுகாப்பு பணிக்காக பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 35 பேர் நேற்று பஸ்சில் சென்று கொண்டுஇருந்தனர்.இந்த பஸ், பட்காம் மாவட்டத்தின் பிரெய்ல் மலைப்பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, 40 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஆறு பேர் காயம் அடைந்தனர்.மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.