உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் முதல்வர் உறுதியால் சங்கங்கள் முடிவு

பஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் முதல்வர் உறுதியால் சங்கங்கள் முடிவு

பெங்களூரு: போக்குவரத்து கழக ஊழியர்களுடன், ஆலோசனை நடத்துவதாக, முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளதால், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று நடத்தவிருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.கர்நாடகாவின் கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., வடமேற்கு மற்றும் கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகங்கள், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, டிசம்பர் 31ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தன.ஊதிய உயர்வு, பி.எப்., தொகையை வழங்குவது, 'சக்தி' திட்டத்தின் பாக்கியுள்ள தொகையை வழங்குவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். புத்தாண்டு வேளையில் பஸ்கள் இல்லாமல், பயணியர் அவதிப்படும் சூழல் நிலவியது.முதலில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்துடன் பேச்சு நடத்தி, கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என, உறுதி அளித்தார். ஆனால், ஊழியர் சங்கம் சம்மதிக்கவில்லை. போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர்.முதல்வர் சித்தராமையா, அமைச்சர் ராமலிங்கரெட்டி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அப்போது முதல்வர், பொங்கலுக்கு பின்னர், போக்குவரத்து கழக ஊழியர்களுடன் பேச்சு நடத்துவதாக உறுதி அளித்தார். இது குறித்து, அமைச்சரும், ஊழியர்களிடம் கூறி போராட்டத்தை வாபஸ் பெறும்படி கேட்டு கொண்டார். இதன்படி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் அனந்த சுப்பாராவ், நேற்று அளித்த பேட்டி:போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்துவதாக, முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். எங்களின் கோரிக்கை நிறைவேறும் என, கூறியுள்ளார். எனவே நாளை (இன்று) நாங்கள் அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்.முதல்வருடன் ஆலோசனை நடத்தும் போது, எங்களின் கோரிக்கைகளை விவரிப்போம். ஊதிய உயர்வு, பாக்கி ஊதியத்தை வழங்குவது என, பல கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை