உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் கைது மோசடி ரூ.24 லட்சம் இழந்த தொழிலதிபர்

டிஜிட்டல் கைது மோசடி ரூ.24 லட்சம் இழந்த தொழிலதிபர்

துமகூரு,'பணமோசடி வழக்கில் கைது செய்வோம்' என, மிரட்டி, தொழிலதிபரிடம் 24 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம், துமகூரின் கியாத்சந்திராவில் வசிப்பவர் ராகவராவ், 55; தொழிலதிபர். கடந்த செப்., 17ம் தேதி, இவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.எதிர்முனையில் பேசிய நபர், 'மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் 1.96 கோடி ரூபாய் கிரெடிட் கார்டு பாக்கி கட்ட வேண்டும்' என்று கூறினார்.அதிர்ச்சி அடைந்த ராகவராவ், 'நான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது இல்லை' எனக் கூறி, மொபைல் இணைப்பை துண்டித்தார். மறுநாள் இன்னொரு நபர், ராகவராவிடம் பேசினார்.தான், 'மும்பை சைபர் கிரைம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிதின் பவார்' என்று கூறினார். 'பணமோசடி வழக்கில் கைதான சுரேஷ் என்பவர், உங்கள் பெயரை கூறி உள்ளார்.மும்பையில் உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் 22 கோடி ரூபாய் உள்ளது. பணத்திற்கான ஆதாரம் என்ன?' என கேட்டார்.மேலும், 'பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை உங்களை கைது செய்யும். எங்களுக்கு இப்போது 24 லட்சம் ரூபாய் அனுப்புங்கள். விசாரணை முடிந்த பின் பணம் உங்கள் கணக்கிற்கு திரும்ப வந்துவிடும். உங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்' என்றும் மிரட்டியுள்ளார்.பயந்துபோன ராகவராவ், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு செப்., 20ம் தேதி முதல் இந்த மாதம் 1ம் தேதி வரை, தவணை முறையில், 24 லட்சம் ரூபாய் அனுப்பினார்.பின், மர்ம நபரை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, துமகூரு சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை