உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று( செப்.,12) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.கடந்த ஜூலை 21 ம் தேதி துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம்( செப்.,09) நடந்தது. இதில், தேஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று(12ம் தேதி) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ