உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிஏஏ, என்ஆர்சி, பொது சிவில் சட்டம் எல்லாம் சதித்திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

சிஏஏ, என்ஆர்சி, பொது சிவில் சட்டம் எல்லாம் சதித்திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்), என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு), யுசிசி (பொது சிவில் சட்டம்) ஆகியவை ஒரு பயங்கரமான சதித்திட்டம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.இது தொடர்பாக பங்கானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: சிஏஏ, என்ஆர்சி ஆகியவை ஒரு பயங்கரமான சதி. சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பழங்குடியினருக்கு இருப்பு இருக்காது, ஹிந்துக்களுக்கும் இருப்பு இருக்காது, 'ஒரே தேசம்-ஒரே அரசியல் கட்சித் தலைவர்' என்ற ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் (யுசிசி) என்ற மற்றொரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் வராது, இந்திய குடியரசு ஒழிக்கப்படும், அரசியலமைப்பு நீக்கப்படும், வரலாறு மாறும், கல்வி மாறும். என்.ஆர்.சி.,யை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் ஹிந்து பெங்காலி மக்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். என் பெற்றோரின் பிறந்த தேதி கூட எனக்கு தெரியாது; அப்படியிருக்கையில் அவர்களின் பிறப்பு சான்றிதழை கேட்டால், நான் எங்கு சென்று வாங்குவது? உங்களிடம் 50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழ்கள் ஏதாவது கேட்டால், முதலில் சிஏஏ.,விற்கு விண்ணப்பிக்குமாறு பா.ஜ., வேட்பாளர்களிடம் சொல்லுங்கள். சிஏஏ.,வுக்கு விண்ணப்பித்தால் வெளிநாட்டவர்கள் ஆகிவிடுவார்கள் என்பதால் அவர்கள் விண்ணப்பிக்கவில்லையா? அவர்களே விண்ணப்பிக்காத போது, நீங்கள் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்?. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

குமரி குருவி
மே 14, 2024 14:11

ஆத்தா நீ வளர்த்து வைத்துள்ள அன்னிய நாட்டு பிரஜைகளுக்கு தானே...


பாரதி
மே 14, 2024 11:47

அருமை. இந்த ஒரு பேச்சே போதும் உங்கள் திருட்டுத்தனத்தை புரிந்துகொள்ள.... நன்றி...


Shekar Prakash
மே 14, 2024 02:38

தீதி கையை காட்டுவது ஹிட்லர் போலவே உள்ளது.


Syed ghouse basha
மே 13, 2024 20:52

உண்மை


Kumaran
மே 13, 2024 19:20

மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாரதா தேவி அரவிந்தர் மற்றும் அன்னை உலகெங்கிலும் கிருஷ்ண பக்தியை கொண்டு சென்ற பிரபுபாதா மற்றும் பல சான்றோர்கள் பிறந்த மண்ணில் இப்படியும் மமதையுடன் ஒரு பெண்ணா


Subash BV
மே 13, 2024 18:49

UNPATRIOTIC LADY PUT THE BHARAT FIRST


தத்வமசி
மே 13, 2024 18:16

ஒவ்வொரு நாடும் தனது கலாசாரத்தையும், பாதுகாப்பையும், வரலாற்றையும் போற்றி பாதுகாக்கும் என்பது பொதுவான விதி ஆனால் அதற்கு நேர் மாறாக இந்தியாவில் உள்ள பல எதிர்கட்சிகள், ஆளும் மாநில கட்சிகள் நடந்து கொள்கின்றன அதன் தலைவர்கள் வரம்பு என்பதே இல்லாமல் பேசுகின்றனர், நடந்து கொள்கின்றனர் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வீட்டு வாசல் வரையில் கமெரா வைத்து ஒவ்வொருவரையும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறது பல நாடுகள் தங்களின் வரலாற்றின் சுவடாக ஒரு கல் கிடைத்தாலும் அதை போற்றி பாதுகாத்து வருகிறது அதனுடன் அவர்களது காலத்தை, கலாச்சாரத்தை பற்றி உயர்வுடன் பேசுகிறார்கள் ஆனால் இந்தியாவில் எல்லாம் தலைகீழ் இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளாக ஆண்டவர்கள் சிறுபான்மையினர், அவர்களால் அடக்கி ஆளப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர்களுக்கு அதிகபட்ச சுதந்திரம் ஆனால் பெரும்பாண்மையாந மக்களுக்கு இல்லை இதெல்லாம் இவர்களைப் போன்ற அரிச்சுவடி தெரியாத வெறும் ஓட்டுக்காக, பதவிக்காக மட்டுமே இருக்கின்ற அரசியவாதிகளால் உருவாகிறது


Rajah
மே 13, 2024 17:53

என் பெற்றோரின் பிறந்த தேதி கூட எனக்கு தெரியாது நீங்கள் பிறந்த திகதியாவது தெரியுமா? எப்படி நீங்கள் எல்லாம் முதலமைச்சரானீர்கள் குடியேறிகளை வாக்கு வங்கிக்காக ஆதரிக்கும் உங்களிடமிருந்து தேசப்பற்றை எதிர்பார்க்கலாமா? பங்களாதேஷிடம் அணு ஆயுதம் இருக்கிறது ஆகவே குடியேறிகளை வரவேற்கின்றோம் என்று சொல்வீர்கள்


GMM
மே 13, 2024 17:50

சிஏஏ போன்ற சட்டங்கள் நாடு முழுவதும் ஏற்கும் போது, மம்தா மட்டும் எதிர்க்க காரணம்? மம்தா வெற்றிக்கு உதவி வருவது கள்ள குடியேறிகள்/ பாகிஸ்தான், பங்களாதேஷ் ஊடுருவல் வாக்காளர்கள்? பிறப்பு சான்றிதழ் உண்டு குடிமக்கள் என அடையாள படுத்த ஆண்டுக்கு ஒருமுறை குறைந்த பட்சம் அரசுக்கு /ஊருக்கு வரி செலுத்த வேண்டும்


Murthy
மே 13, 2024 17:50

CAA வுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட மம்தா அவர்கள் இப்போது அரசியலுக்காக மாற்றி பேசுகிறார்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ