உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 300 பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை!

300 பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை!

புதுடில்லி : பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த 300க்கும் மேற்பட்ட ஹிந்துக்களுக்கு நேற்று, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக நம் நாட்டுக்கு வந்துள்ள ஆறு சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் 2019ல் நிறைவேற்றப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=60jvsao1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, மூன்று நாடுகளிலும் சிறுபான்மையினராக இருந்த ஹிந்து, சீக்கியர், கிறிஸ்தவர், பவுத்தர், சமணர், பார்சி மதத்தினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும். இதில், முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மூன்றுமே இஸ்லாமிய நாடுகள் என்பதால், அங்கே முஸ்லிம்களுக்கு துன்புறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை என, மத்திய அரசு பதிலளித்தது. லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன், இந்த சட்டத்துக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன. சட்டமும் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, 2014 டிசம்பருக்கு முன், அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. அது, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை, 25,000த்துக்கு மேலானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். மூன்று நிலைகளில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.முதலில் மாவட்ட குழு பரிசீலனை. தபால் துறை கண்காணிப்பாளர் பதவிக்கு நிகரான ஒரு அதிகாரி தலைமையில், தகவல்களை குழு சரிபார்த்து, மாநில குழுவுக்கு பரிந்துரைக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் இயக்குனர் அதன் தலைவர். இந்த குழு ஆய்வு செய்து, தேசிய குழுவுக்கு அனுப்பும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குடியுரிமை வழங்க உத்தரவு பிறப்பிக்கும்.இந்த வகையில், முதல் கட்டமாக 300 பேருக்கு நேற்று, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இவர்கள் எந்த நாட்டவர் என்பதை அரசு தெரிவிக்கவில்லை. பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்துக்கள் என்று தெரிகிறது. டில்லியில் நடந்த எளிய நிகழ்ச்சியில், இவர்களில் 14 பேருக்கு உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா குடியுரிமை சான்றிதழை வழங்கினார்.

அமித் ஷா மகிழ்ச்சி

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். அண்டை நாடுகளில், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, நம் நாட்டுக்கு அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்; அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்ற உறுதியையும் அளிக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான், பிரதமர் மோடியின் வாக்குறுதியாகும்.இவ்வாறு ஷா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Easwar Kamal
மே 16, 2024 17:15

பாக்கிஸ்தான் ஹிந்துக்களுக்கு கொடுக்கீறீகளே நமது அண்டை தேசமான இலங்கை உள்ள ஈழ தமிழர்களுக்கு ஏதாவது செய்யலாமே/ அது எல்லாம் கண்ணனுக்கு தெரியாது இப்போது குடியுரிமை பெற்றவர்கள் பக்கத்து மாநிலமான கட்ச் அதுவும் குஜராத்தி மொழி பேசுவார்களா இருப்பார்கள் அதுதான் இந்த கரிசனை


ganapathy
மே 16, 2024 22:43

இலங்கைல கொடுமை நடக்குதுன்னு காசு பாத்த உன்ற தொளபதி அவங்களுக்கு மொதல்ல என்ன செஞ்சாரு?


kulandai kannan
மே 16, 2024 16:37

மோடியின் காரண்டி


RAMAKRISHNAN NATESAN
மே 16, 2024 13:40

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று புலம்புவது யார்? இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிக்க உதவிய திராவிட மாடல் கட்சியின் அடிமைகள் புரியல? பிரபாகரனின் தாய் சென்னையில் மருத்துவ உதவி பெறுவதை எந்த கட்சியின் அரசு தடுத்ததோ, அதே கட்சியின் அடிமைகள்


தமிழ்வேள்
மே 16, 2024 13:40

எதுக்கு சையது, ஹிந்துக்கள் சங்காத்தமே வேண்டாம் என்றுதானே மத அடிப்படையில் தனி நாடு வாங்கிக்கொண்டு சென்றீர்கள் அப்புறம் பிழைக்க வக்கு இல்லை என்றால் கேவலமாக இல்லையா? இங்கு வந்தால் மட்டும் உழைத்தா பிழைக்கப்போகிறீர்கள்? குண்டு வைத்தல், தங்கம் கடத்தல் போதை கடத்தல்தான் உங்கள் தொழில் இந்த கேவலத்துக்கு பாகிஸ்தானிலேயே இருங்கள்


முருகன்
மே 16, 2024 13:27

தேர்தல் ஆணையம் தோல்வி அடைத்து பல வருடங்கள் ஆகிறது


Narayanan Muthu
மே 16, 2024 13:05

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்கள் தேர்தல் நன்னடத்தை விதி மீறலில் வராதா பாஜக தேர்தல் ஆணையம் இது குறித்து வாய் திறக்காதா


ஆரூர் ரங்
மே 16, 2024 12:40

மொழியின் அடிப்படையில் பாரபட்சம் என்பதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளித்தால் வங்கதேசத்திலுள்ள உருது பேசும் மைனாரிட்டி மக்களும் இங்கு குடியுரிமை கேட்பார்கள்.


ஆரூர் ரங்
மே 16, 2024 12:21

இதே அளவு கோலை வைத்து இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் குடியுரிமை கேட்பது அர்த்தமற்றது. இங்கு பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கேட்பவர்களுக்கு இலங்கையில் பிற்பட்டுள்ள சிங்களவருக்கு ஒதுக்கீடு கொடுப்பதை எதிர்க்க எவ்விதத் தகுதியும் கிடையாது. சிங்கள மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியிருப்பதால் அவர்களுக்கு சலுகைகளைத் தருகிறார்கள். அதிலென்ன தவறு?.


Raju.c yadav
மே 16, 2024 10:47

வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஊழல் மடிந்து சீர்க்கெட்டு கிடந்த இந்திய அரசியலை யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா என்று ஏங்கிய அடித்தட்டு , ஏழை எளிய மக்களுக்கு வர பிரசாதமாக வந்தவர்தான் தீர்க்கதரிசி மோடி அவர்கள் பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு இந்துக்கள் % இல் இருந்து % சதவீதம் இருந்தார்கள் அங்கு இந்துக்கள் படுகொலைகளுக்கும் , அடக்குமுறைகளுக்கும் , சிறுமிகளை கூட்டம் கூட்டமாக கடத்தி லவ் ஜிகாத் திருமணங்களும் செய்து தற்போது % தான் இருகிறார்கள் அவர்களும் வறுமை கோட்டுக்கு கீழ் அடிமைகளாக வாழ்கிறார்கள் இது சத்தியமான ஆதாராப்பூர்வமான உண்மை ஜிகாதிகளால் உடமைகளையும் சொத்துக்களையும் அபகரித்து அடித்து துரத்தப்பட்ட இந்துக்களை இந்தியாவில் அகதிகள் முகாம் ஏற்படுத்தி அன்றைய பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் ஆனால் இன்றுவரை அம்மக்களுக்கு இந்திய சலுகைகைகள் ஏதும் கிடைக்கவில்லை எந்த அரசியல் கட்சியும் அவர்களை திரும்பி க்கூட பார்க்கவில்லை காரணம் அவர்களிடம் வாக்கு வங்கி அரசியல் இல்லை ஏழ்மைகளாகவே இருக்கிறார்கள் தீர்க்கதரிசி மோடி அவர்கள் வாழ்வில் சிறு நம்பிக்கை ஓளியை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்


vijai seshan
மே 16, 2024 10:35

எதிர்க்கட்சிகளுக்கு அறிவு இருக்கா


மேலும் செய்திகள்







புதிய வீடியோ