உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டத்தை சமாளிக்க பாரம்பரியத்தை விடலாமா?: குருவாயூர் கோவிலுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

கூட்டத்தை சமாளிக்க பாரம்பரியத்தை விடலாமா?: குருவாயூர் கோவிலுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி: 'பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, ஏகாதசி நாட்களில் பாரம்பரியமாக நடத்தப்படும் விசேஷ பூஜைகளை எப்படி நிறுத்தலாம்?' என, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கேரளாவின் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், உதயஸ்தமனா என்ற பூஜை தினமும் நடத்தப்படும், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை குறிக்கும் வகையில் இந்த பூஜை பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.இந்நிலையில், பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, ஏகாதசி தினத்தில் மட்டும் இந்த பூஜையை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அந்தக் கோவிலில் பூஜைகள் நடத்தும் உரிமை பெற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பி.சி.ஹாரி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:

இந்த உதயஸ்தமனா பூஜை உள்ளிட்டவை ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. கடவுளின் அருளைப் பெறுவதற்காக நடத்தப்படும் இதுபோன்ற பாரம்பரிய பூஜைகளை, பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக எப்படி நிறுத்தலாம்?தந்திரி எனப்படும் தலைமை பூசாரி இதற்கு எப்படி ஒப்புதல் அளித்தார்? இது போன்று பூஜைகளை நிறுத்தும் முடிவை எப்படி கோவில் நிர்வாகம் எடுக்கலாம்? இதுகுறித்து, கோவில் நிர்வாகம், மாநில அரசு பதிலளிக்க வேண்டும்.தற்போதைக்கு இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கோவிலின் இணையதளத்தில் உள்ள தினசரி பூஜைகள் பட்டியலில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். இந்த பிரச்னை தொடர்பாக விசாரித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
டிச 12, 2024 21:17

அப்ப கூட்டத்த நீதிமன்றம் சமாளிக்கட்டும். பாரம்பரியத்த அவங்க பாத்துக்குவாங்க. ஆனா சொல்யுய்ஷன்ன்னு ஒண்ணு தெரியாது.


S Regurathi Pandian
டிச 12, 2024 11:37

ஒரு காலத்தில் உச்சநீதிமன்றம் கூட இல்லை. அந்த பாரம்பரியத்திற்கு திரும்பவேண்டுமா? ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட பூஜை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அப்படியானால் அதற்கு முன்பு அந்த பாரம்பரியம் இல்லை என்றுதானே பொருள். இல்லாத பாரம்பரியத்தை கொண்டுவந்தது பழைய பாரம்பரியத்தை எதிர்ப்பதாகாதா?


Barakat Ali
டிச 12, 2024 08:38

இப்போ பாரம்பரியத்தை எப்படி விடுவீங்க என்று கேட்கும் உச்சநீதிமன்றம் சபரிமலை பாரம்பரியத்தைத் தடுத்து போலி புரட்சியை அரங்கேற்றியது ஏன் ????


sankaranarayanan
டிச 12, 2024 07:19

இதே உச்ச நீதிமன்றம் தமிழக அறநிலயத்துறை அமைச்சர் தலையிட்டால் பல விஷயங்களுக்கு தடை செய்ய வேண்டும் தில்லை நடராஜர் கோயில் தீக்ஷதர்களால் நன்றாக பராமரிக்கப்பட்டு வரும்போது அதில் அது இல்லை இது இல்லை என்று மூக்கை நுழைத்து அவர்களிடமிருந்து அதிகாரத்தை பெறவே செய்யும் நாடகத்தை அறவே நிறுத்த வேண்டும் இது போன்று பழனி கோயிலில் ஆகம முறைக்கு முன்னுரிமை கொடுத்து போகர் சன்னதிக்கு பெருமை தர வேண்டும் இன்னும் பல பல இந்து விரோதமான செயல்களை செய்யாமல் சனாதன தர்மத்திற்கு ஊரு விளைவிக்காமல் காப்பாற்ற உச்ச நீதி மன்றமே முன் வரவேண்டும்


Dharmavaan
டிச 12, 2024 07:11

உச்ச நீதியின் பச்சோந்தித்தனம்... இந்த பாரம்பரியத்தை எல்லாம் கோயில்களிலும் இது கண்டிப்பாக்க்கியிருக்கிறதா. ஆங்கில புதுவருடப்பிறப்புக்கு நடு இரவில் கோயில்களை திறக்கப்படலாமா இன்னும் இதே போல் பல பாரம்பர்யங்கள் நிறுத்தப்பட்டுள்ளன ஹிந்து கோயில்களில் திருப்பதி உட்பட கேட்க நாதியில்லை


chennai sivakumar
டிச 12, 2024 06:51

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதையாக இருக்கிறது இவர்கள் செயல். நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி கொண்டு போகிறது. கோவில்களில் கூட்டம் பிச்சு தள்ளுது. இப்படி செய்தால் வழக்கமான பூஜை கூட செய்ய முடியாது வரும் காலங்களில்.


Mani . V
டிச 12, 2024 05:44

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை கோவில் விஷயத்தில் மாடல் அரசு செய்யும் அரசியலை தட்டிக் கேட்க தமிழக நீதிமன்றங்களுக்கு தைரியம் இருக்காது.


Kasimani Baskaran
டிச 12, 2024 05:42

கடவுள் நம்பிக்கை இல்லாத அச்சன்கள் இடையில் புகுந்து இது போல ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள்.


J.V. Iyer
டிச 12, 2024 04:47

எவ்வளவோ வழக்குகள் தேங்கி இருக்க இவைங்க எப்படி அடிக்கடி ஹிந்துக்கள் கோவில்களில் மட்டும் தலை இடுகிறார்கள்? இப்படித்தான் மற்ற மதத்தினர் போட்ட வழக்கால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மூக்கை நுழைத்தார்கள். தமிழக கோவில்களைப்பற்றி இவர்கள் என்ன சொன்னாலும் தமிழக மாடல் அரசு புறம் தள்ளும். இவர்களால் என்ன செய்ய முடிந்தது? பிறகு ஏன் இப்படி? ஹிந்துக்கள் இளிச்சவாயர்களா?


Kundalakesi
டிச 12, 2024 04:03

இதே நீதி தான் சபரி மலை பெண்கள் நுழைய அனுமதித்தது. அதெப்படி


சமீபத்திய செய்தி