உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

மும்பை :“காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக எந்த தகவல்களையும் கனடா அரசு, இந்தியாவுடன் பகிரவில்லை,” என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fvzkjqyx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார்.இந்த விவகாரத்தால், கனடா - இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் நான்கு பேரை, அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது, நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் எந்த தகவலையும் கனடா அரசும், இந்த வழக்கை விசாரிக்கும் கனடா புலனாய்வு அமைப்பும், இதுவரை நேரடியான எந்த தகவலையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. காலிஸ்தான் ஆதரவாளர்களை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் ஊக்குவிப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Syed ghouse basha
மே 14, 2024 14:31

ஹிஹிஹிஹி


கஜேந்திரா
மே 14, 2024 10:32

நாலு பேர் போட்டோ வெளிவந்ததே... அது தகவல் இல்லையா?


Kasimani Baskaran
மே 14, 2024 06:44

தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் கனடா அரசு இயங்குவது வெட்கக்கேடானது


RAJ
மே 14, 2024 06:03

ஒண்ணும் இல்ல சார் அப்புறமா குடுப்பாங்க சார் ரெடி பண்ணுனுமல நாங்க என்னென்னமோ நினைச்சுகிட்டு வந்தோம் இப்ப பாதிலியே போவவேண்டியது இருக்கும் போல இருக்கு போங்க சார் உங்களுக்கு பிசினஸ் தெரில


RAJ
மே 14, 2024 06:02

ஒண்ணும் இல்ல சார் அப்புறமா குடுப்பாங்க சார் ரெடி பண்ணுனுமல நாங்க என்னென்னமோ நினைச்சுகிட்டு வந்தோம் இப்ப பாதிலியே போவவேண்டியது இருக்கும் போல இருக்கு போங்க சார் உங்களுக்கு பிசினஸ் தெரில


J.V. Iyer
மே 14, 2024 04:12

பொய்யன் Prime Minister of Canada Justin Trudeau, பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டால்தான் நிம்மதி காலிஸ்தான் நாட்டிற்கு கனடாவின் ஒரு பகுதியை இவர் ஒதுக்கலாமே? பிரச்சினைகளை தீர்க்க இதுதான் ஒரே வழி இவர்களுக்குதான் நிலம் நிறைய இருக்கிறது பிரிட்டிஷ் கொலம்பியாவை பெயர் மாற்றம் செய்து காலிஸ்தானாக அறிவிக்கலாம் மேலும், தனிநாடு கேட்கும் கனடாவின் கியூபெக் மாநிலத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கவேண்டும்


Ramesh Sargam
மே 13, 2024 21:26

அவர்களிடம் உண்மையான தகவல் எதுவும் இல்லை என்று அர்த்தம் அல்லது பொய் தகவல்களை சேகரிக்கிறார்கள் என்று அர்த்தம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை