உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை; கனடாவுக்கு இந்தியா பதிலடி!

குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை; கனடாவுக்கு இந்தியா பதிலடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குற்றச்சாட்டுகளுக்கு கனடா எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. பொய் குற்றச்சாட்டுகளால் இருதரப்பு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.கனடா மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்திய தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டி இருந்தது. லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரியின் கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்தியா மீது சுமத்தியுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு கனடா எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு எதிரான வழக்குகள், இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தினால், இரு தரப்பு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்திய மண்ணில் இருந்து, தேச விரோத சக்திகளாக செயல்படும் கனடா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு வலியுறுத்தி உள்ளது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பதில் அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறோம். இவ்வாறு கீர்த்தி வரதன் சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜுரேஷ்
டிச 21, 2024 14:19

இங்கே மட்டும் என்ன வாழுதாம்? எவனாவது கம்ளைண்ட் குடுத்தா உடனே கைது, ரெய்டுன்னு கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க. என்ன சொல்றதா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்கன்னு டயலாக் வேற. கடைசில விசாரணைக்கு ஒத்துழைக்கலேன்னு ஒப்பாரி.


Kasimani Baskaran
டிச 21, 2024 07:54

கனடா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்ல நாலு பேர் இருந்தால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள் . கனடாவுக்கு ஒத்து ஊத பல நாடுகள் தயார் என்பதால்தான் இது போல பேச முடிகிறது. தீவிரவாதிகளை பாதுகாப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை கனடா புரிய வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வந்தால்தான் சாத்தியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை