உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 14 மனைகளின் பத்திரப்பதிவு ரத்து முடா வசமானது ரூ.62 கோடி நிலம்

14 மனைகளின் பத்திரப்பதிவு ரத்து முடா வசமானது ரூ.62 கோடி நிலம்

மைசூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளின் பத்திரப்பதிவை, பதிவுத்துறை நேற்று ரத்து செய்தது. இதையடுத்து, 62 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலம், 'முடா' வசமானது.கர்நாடகாவில் நடக்கும் காங்., ஆட்சியில், முதல்வராக சித்தராமையா பதவி வகிக்கிறார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மைசூரு நகர மேம்பாட்டு ஆணையமான, 'முடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் மற்றும் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.இதையடுத்து, பிரச்னைக்குரிய 14 வீட்டுமனைகளை முடாவுக்கு திரும்ப தருவதாக, பார்வதி நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். நேற்று காலை முடா அலுவலகம் சென்ற, சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான யதீந்திரா, முடா கமிஷனர் ரகுநந்தனிடம் பார்வதியின் கடிதத்தை சமர்ப்பித்தார்.பின் யதீந்திரா கூறுகையில், ''அப்பாவின் நற்பெயரை விட, எங்களுக்கு சொத்து முக்கியம் இல்லை. அப்பா மீது அரசியல் காரணங்களால் பதியப்பட்ட வழக்கால், அம்மா மிகுந்த மன கஷ்டத்தில் உள்ளார்,'' என்றார்.சித்தராமையா தன், 'எக்ஸ்' பக்கத்தில், 'எனக்கு எதிராக நடக்கும், அரசியல் சதிகளை பொறுத்து கொள்ள முடியாமல், வீட்டுமனைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி, முடாவுக்கு என் மனைவி கடிதம் எழுதி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவரது முடிவை நான் மதிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.முன்னதாக, முடா கமிஷனர் ரகுநந்தன், வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். 'வீட்டுமனையை தன்னிச்சையாக திரும்ப கொடுத்தால் உடனடியாக பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை' என, வக்கீல்கள் ஆலோசனை கூறினர்.இதையடுத்து, பத்திரப்பதிவு அதிகாரிகள் பார்வதியை நேற்று மாலை ரகசிய இடத்தில் சந்தித்தனர். 14 மனைக்கான பத்திரத்தை, அதிகாரிகளிடம் அவர் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மனைகளின் பதிவை உடனடியாக ரத்து செய்தனர்.இதையடுத்து சர்ச்சைக்குரிய மனைகள் அனைத்தும், முடாவின் கட்டுப்பாட்டில் வந்தன. இந்த மனைகளின் மதிப்பு, 62 கோடி ரூபாய்.முடா கமிஷனர் ரகுநந்தன் நேற்று இரவு அளித்த பேட்டியில், ''முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி தாமாக முன்வந்து, 14 வீட்டுமனைகளை திருப்பி கொடுத்தார். அதன் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, 14 வீட்டுமனைகளும் முடாவின் கீழ் வந்துள்ளன,'' என்றார்.இதற்கிடையில், கெசரே கிராமத்தில் முடா கையகப்படுத்திய, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தில், லோக் ஆயுக்தா போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். முதல்வர் மீது புகார் அளித்த, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணாவும் உடன் இருந்தார்.

அரசியல் நாடகம்: பா.ஜ.,பாய்ச்சல்

மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டியில், ''முடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவானது. அமலாக்கத் துறையும் வழக்கு பதிந்து உள்ளதால் அவர் பயந்துள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில், வீட்டுமனைகளை திரும்ப கொடுப்பதாக, அரசியல் நாடகம் போடுகிறார்.''தன் மீதான தவறை ஒப்புக்கொண்டு உள்ளார். கபட நாடகத்தை விட்டுவிட்டு, ராஜினாமா செய்யட்டும். அதற்கு முன், கவர்னரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணாவை, முதல்வரும் அவரது ஆதரவாளர்களும் மிரட்ட பார்க்கின்றனர். அவருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு கடிதம் எழுதி உள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கல்யாணராமன் சு.
அக் 02, 2024 12:55

கெசரே கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் கிட்டத்தட்ட 20 கோடியா ? அம்மா , இது தெரிஞ்சிருந்தா நானும் அந்த கிராமத்துக்கு ரொம்ப முன்னாடியே போய், எப்படியானும் ஒரு ஏக்கர் நிலமாவது வாங்கியிருப்பேனே கடன் வாங்கியாவது ....... வடை போச்சே


கல்யாணராமன் சு.
அக் 02, 2024 12:51

"வீட்டுமனைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி, முடாவுக்கு என் மனைவி கடிதம் எழுதி இருப்பது ஆச்சரியமாக உள்ளது..." அப்படின்னு சித்தராமையா சொல்றது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது ... சிவாஜி கணேசன் பாடின மாதிரி "அவரா சொன்னார் இருக்காது ... அப்படி எதுவும் நடக்காது ... நடக்கவும் கூடாது .... நம்ப முடியவில்லை ... இல்லை .... இல்லை... "


Ramesh Sargam
அக் 02, 2024 12:42

பிற்காலத்தில் அந்த மனைகளை விற்கும்போதும், பத்திரவு பதிவு செய்யும்போதும் தெளிவு இருக்கவேண்டும், யார் யார் வாங்குகிறார்கள் என்று. மீண்டும் சித்துவோ, அவரின் மனைவியோ, அல்லது அவர்கள் குடும்பத்தினரோ அதை வாங்குகிறீர்களா என்று கண்காணிக்கவேண்டும்.


M.R. Sampath
அக் 02, 2024 09:29

சட்டத்தை வளைத்து பெறப் பட்ட சொத்து க்களை வழக்கு நிலுவையில் இருக்கும்போது சொத்து பதிவாளர்கள் சொத்து பதிவை ரத்து செய்வது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த செயலும் சித்தராமையா வற்புறுத்தலின் பின் அணியில் இருப்பதாக தெரிகிறது. இதனையும் கருத்தில் கொண்டு அமுலாக்க துறை மற்றும் லோக அயுக்த செயல் படவேண்டும்.


sankaranarayanan
அக் 02, 2024 09:25

மூடா வழக்கில் மூட முடியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் சித்து பதினான்கு மனைகளை திருப்பி கொடுத்தால் மட்டும் போதாது தான் வகிக்கும் ஊழல் அரசிலிருந்து விடுபட்டு நிரபராதி என்று நிறுபிக்கவும் வேண்டும் மேலும் விரைவில் கார்கேக்கும் இனி நில அபரகிப்பு ஆபத்து வர இருக்கிறது அவர்க்கும் இதே போன்று நில அபகரிப்பு வழக்கு விரைவில் வரும் அவரும் கட்சி பதவியை உதறி தள்ள வேண்டும்


Indhuindian
அக் 02, 2024 09:03

கூட்டணி தர்மத்தை எப்படியாவது காப்பாத்தணும் அவங்க கொள்கைதான் எங்க கொள்கையும். எப்பிடி செந்தி பாலாஜி அவரு வாங்கின பணத்தையெல்லாம் கொடுத்துட்டேன் ஆளை விடுங்கடா சாமின்னு தப்பிக்கலாம்னு பாத்தாரு ஆனா அப்படியெல்லாம் தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சி போச்சி இங்கேயும் இவரு ஆட்டைய போட்ட நிலத்தெல்லாம் திருப்பி குடுத்துட்றேன் நானே முதல் மந்தியா இருந்துகிறேன்னு சொல்றாரு பாக்கலாம் சட்டம் என்ன சொல்லுதுன்னு ஆனா இது அசல் கலப்பிடமில்லாத அக்மார்க் திராவிட மாடல் நிலைப்பாடு ஆகும்


VENKATASUBRAMANIAN
அக் 02, 2024 08:00

இங்கே வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து தப்பிக்க பார்த்தார் செந்தில் பாலாஜி. அதேபோல் சித்தராமையா மனைவியும் செய்துள்ளார். திருடிவிட்டு மாட்டிக்கொண்ட பிறகு திருடியதை திருப்பி கொடுத்தால் போதும். எல்லா திருடர்களும் வெளியே வந்த விடலாம். இதுதான் நீதிமன்றம் எதிர்பார்க்கிறதா. சட்டம் அனைவருக்கும் சமம் தானே


Devan
அக் 02, 2024 07:33

இது நம்ம பாலாஜி கேஸ் போலவே இருக்கே. லஞ்சம் வாங்கிட்டு திருப்பி கொடுத்தால் தண்டனை கிடையாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை