ராணுவ தேர்வுக்கு வந்த இளைஞர்கள் மீது தடியடி
பெலகாவி: ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் இருந்து ராணுவ தேர்வுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை அடுத்து ராணுவத்தினர், போலீசார் லேசான தடியடி நடத்தினர்.'ராணுவத்தில் ஆள் சேர்ப்பு' குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக பெலகாவியில் நேரடி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக, கர்நாடகாவின் 16 மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் பெலகாவிக்கு படையெடுத்தனர்.நகரின் சி.பி.டி., மைதானத்தில் ராணுவ தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தால், மைதானம் அருகில் நேற்று முன்தினம் இரவு முதலே இளைஞர்கள் வர துவங்கினர்.நேற்று காலையில், நேரம் செல்லச்செல்ல, இளைஞர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருந்தது. 30,000க்கும் அதிகமான இளைஞர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், ராணுவத்தினரும் சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவர்கள் கேட்காததால் லேசான தடியடி நடத்தினர். நிலைமை கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, இளைஞர்களின் உயரம் கணக்கிடப்பட்டது. தகுதியான இளைஞர்கள் மட்டும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.11_DMR_0025தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ராணுவத்தினர் தடியடி நடத்தினர்.