உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எரியும் கழிவுகளால் சரியும் காற்றின் தரம்; தலைநகர்வாசிகள் பாடு திண்டாட்டம்!

எரியும் கழிவுகளால் சரியும் காற்றின் தரம்; தலைநகர்வாசிகள் பாடு திண்டாட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மாசுபாடு அடைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் கூறி உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் தலைநகர் டில்லியில் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் அதே வேளையில், தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்றின் மாசுபாடு எப்படி உள்ளது என்ற விவரத்தை வெளியிட்டு உள்ளனர். அவர்கள் கூறி உள்ளதாவது; காற்றின் தரம் மோசமாக மாறி இருக்கிறது. இன்று லேசான மழைக்கு வாய்ப்பதாக கருதப்படுவதால் காற்றின் தரம் மிதமாகவே இருக்கும்.கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் இருந்து மணிக்கு 8 முதல் 12 கி.மீ., வரை காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக நேற்றைய தினம் 37.4 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 26.4 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அழகுமணி
செப் 25, 2024 18:05

உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சிதான் உலக அமைதிக்காக வெளில போயிடறோம். நியூயார்க்குல எவ்ளோ தூய்மையா காத்து வருது.


Sudha
செப் 25, 2024 11:40

Delhi is யூனிட் to be capital on. Many counts


அப்பாவி
செப் 25, 2024 09:23

உக்ரைன்ல போரை நிறுத்த பாடுபடவே நேரம் பத்தலை. தலைநகரில் என்ன ஆனா நமக்கென்ன?


veeramani
செப் 25, 2024 09:17

காற்று மோசமாக மாசு நடந்துவருகிறது . இதற்கு தீர்வுதான் என்ன ???மய்ய அரசில் வேலைபார்த்த முதன்மை விஞ்ஞானிகருத்து


N.Purushothaman
செப் 25, 2024 09:13

எவ்வளவு சொன்னாலும் நாங்க அப்படித்தான் செய்வோம்ங்கிற மனநிலையில இருந்தா எப்படி மாற்றம் வரும் ?


முக்கிய வீடியோ