மேலும் செய்திகள்
பக்தர்களின் எடை பார்த்து டோலி கட்டணம்
07-Dec-2024
புதுடில்லி:வடகிழக்கு டில்லி சோனியா விஹாரில் 400 ரூபாய் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாடகைக் கார் டிரைவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.நொய்டாவைச் சேர்ந்த தீபன்ஸ் என்ற அஷூ, ராகுல் மற்றும் மயங்க் ஆகிய மூவரும், கடந்த 17ம் தேதி நள்ளிரவில், ரேபிடோ மொபைல் செயலில் டாக்ஸி பதிவு செய்தனர். அந்த அழைப்பை ஏற்ற டிரைவர் சந்தீப், மூவரையும் ஏற்றி சோனியா விஹார் புஸ்தா அருகே இறக்கி விட்டார். அப்போது, கட்டணமாக 400 ரூபாய் கேட்டார். ஆனால், அதைக் கொடுக்காமல் மூவரும் வாக்குவாதம் செய்தனர். திடீரென கத்தியால் சந்தீபை சரமாரியாக குத்தி விட்டு ஓடினர். தகவல் அறிந்து வந்த போலீசார், சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தீபை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.
07-Dec-2024