உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீட்டிப்பது குறித்து முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vojncydu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (ஜன.,5) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை; அமைச்சராக நீடிப்பதை முதல்வர் தான் முடிவு எடுக்க முடியும். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை' எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

sankaranarayanan
ஜன 05, 2024 23:06

நீதிக்கு புறம்பாக மாறாக எதுவும் செய்யமாட்டேன் என்று சத்திய பிரமாண எடுத்துக்கொண்டதை காற்றிலே பறக்க விட்டாச்சு இனி என்ன சொன்னாலும் காதிலே கேட்காது தெய்வம்தான் தக்க பதில் செல்ல வைக்க வேண்டும்


rajasekaran
ஜன 05, 2024 20:31

இங்கு என்ன பிரச்சன்னை என்றால் எதிர் கட்சி அதிமுக பேசாமல் இருக்கிறது. அண்ணாமலை மட்டும் தான் கத்தி கிட்டி இருக்கார். இதுவே அதிமுக ஒரு மந்திரி உள்ளே இருந்தால் இந்த சுடலை என்ன வெல்லாம் கத்தி இருப்பார், உலகமே போச்சு என்று கதறி இருப்பார்.


Paraman
ஜன 05, 2024 20:03

அது உச்ச நிதி மன்றம் அங்கு இப்படித்தான் நாடு, மக்களுக்கான (அ)நீதி கொடுப்பார்கள்....தலைமை நிதிபதியாக இருக்கும்போது இது போன்ற சரித்திர (தரித்திர ) புகழ் வாய்ந்த தீர்ப்புகள் கொடுக்கப்படுவது இயல்பே வாளுக உச்ச நிதி மன்ற சன(பண) நாயகம் வாளுக இந்திய அநீதி துறை


Seshan Thirumaliruncholai
ஜன 05, 2024 17:43

தமிழக முதல்வர் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு சரியான முடிவு எடுப்பார் என்று நீதிமன்றம் கருதி வலக்கை தள்ளுபடி செய்துள்ளது. அதாவது சட்டத்துக்கு உட்பட்டு. ஒவ்வொரு செயலுக்கும் சரியான நேரத்தில் பலன் கிடைக்கும் 2024 இல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலாக இருக்கலாம்.


vbs manian
ஜன 05, 2024 16:59

அதிர்ச்சியை அளிக்கிறது.வழக்கு களில் சிக்கியிருக்கிறார். நீதிமன்றம் திரும்ப திரும்ப ஜாமின் மறுக்கிறது. ஆனாலும் அமைச்சராக தொடரலாம். அமைச்சருக்கான ஊதியம் மற்ற இத்யாதி வசதிகள் எல்லாவற்றையும் மக்கள் வரிப்பணத்தில் அனுபவிக்கலாம். இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது.


Narayanan
ஜன 05, 2024 15:54

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் ஊழியத்தில் இருந்து செந்தில்பாலஜிக்கு ஊழியம் வழங்கலாமே


Narayanan
ஜன 05, 2024 15:52

கவர்னரின் அதிகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலையிடக்கூடாது . இப்போதெல்லம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவர்னரின் அதிகாரத்தில் தலையிட்டு அந்த பதிவியின் தரத்தை தாழ்த்துகிறார்கள் . இது ஜனநாயத்திற்கு பேராபத்து . மக்களின் வரிப்பணத்தில் ஒரு தவறான செயல் நடக்கும்போது அதை தவறில்லை என்று சொல்வது வேடிக்கை


Subramanian N
ஜன 05, 2024 15:41

கைதிக்கு சம்பளம் மக்களின் வரி பணத்திலிருந்து. இதுதான் நமது நீதிமன்றம்


ponssasi
ஜன 05, 2024 15:38

சட்டமன்ற உறுப்பினர் இல்லாதவர் கூட அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுக்கலாம், ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் என்பது அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள விதி. முதல்வர் ஏன் பொன்முடியை அமைச்சராக நியமிக்கக்கூடாது, தண்டனை பெற்றதால் தான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார், அமைச்சர் என்பது முதல்வரின் தனிப்பட்ட விஷயம் அல்லவா. இது என்ன நியதி அடங்கியுள்ளது. இதற்க்கு ஒரு கடிவாளம் தேவை. முதல்வர் தன் வீட்டு பணியாளர்களை யாரை வேண்டுமானாலும் நியமித்துக்கொள்ளட்டும் ஊதியம் அரசுதான் கொடுக்கப்போகிறது ஆனால் அமைச்சர் என்பவர் அப்படிப்பட்டவர் அல்ல, மிகவும் மதிப்பு மிக்க ஸ்தானம் அது அதில் முதல்வரால் ஊழல்வாதி என அடையாளம் காணப்பட்டவர் அந்த முதல்வர் அமைச்சரவையில் சிறையில் உள்ள அமைச்சர். இது மக்களை அவமதிக்கும் செயலாகும். இல்லை செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் துணிவு முதல்வருக்கு இல்லை என நினைக்க தோன்றும்.


ஆரூர் ரங்
ஜன 05, 2024 15:23

அன்பளிப்பு வாங்கி வேலை கொடுத்து பிறகு அதனைத் திருப்பிக் கொடுத்த நேர்மையாளர்????. இதுபோல இன்னொரு மஹாத்மா மந்திரியாக கிடைக்கிறது கஷ்டம். இது நீதிமான்களுக்கு புரிந்திருக்கலாம். இவர்மீது வழக்குப் போட அனுப்பிய ஒய்வு பெற்ற நீதியரசர் பாவம்.


கனோஜ் ஆங்ரே
ஜன 05, 2024 17:35

ஆரூராரே... ஊஊஊஊஊஊஊஊஊஊ.....?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ