உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு

கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் திறக்கப்பட்டு இருந்ததால், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 'பப்' மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி 2008ல் துவங்கப்பட்டதிலிருந்து, பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். விராட் கோலிக்கு பெங்களூரில் ரசிகர்கள் அதிகம். அவரும் பல முறை தனக்கும், பெங்களூருவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருப்பதாக கூறியுள்ளார்.பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள, கஸ்துாரிபா சாலையில் விராட் கோலிக்கு சொந்தமான, 'ஒன்8 கம்யூன்' என்ற பெயரில் பப் உள்ளது. பெங்களூரில் நள்ளிரவு தாண்டி 1:00 மணிக்கு மேல் பப் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 6ம் தேதி இரவு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சில பப்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரம் திறக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுவதாகவும், கப்பன் பார்க் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் ரோந்து சென்றனர். விராட் கோலிக்கு சொந்தமான பப் உட்பட நான்கு பப்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் திறந்திருந்தது தெரிந்தது. சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

theruvasagan
ஜூலை 10, 2024 16:04

நடிகனுகளும் கிரிக்கெட்காரனுகளும் தாங்கள் கோடிகளிலே சம்பாதிக்க வகை செய்த ரசிகக்குஞ்சுகளுக்கும் சமுதாயத்துக்கும் இந்த மாதிரி பார் வைத்து சமூக சேவை ஆற்றி தாங்கள் பட்ட நன்றிக்கடனை தீர்க்குறாங்களாம்.


J.Isaac
ஜூலை 10, 2024 17:37

சமுதாயம் , சீர்கெட்டு,சீரழிந்து கொண்டிருக்கிறது. இளைய தலைமுறைகள், எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் அருவருப்பான செயல்களில் ஈடுப்பட்டு ,கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைகிறார்கள்


Ram pollachi
ஜூலை 10, 2024 13:22

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதம் இல்லாமல் எ(இ)ந்த தொழிலும் செய்யமுடியாது...


moulee
ஜூலை 10, 2024 11:12

What is wrong in it? The rule is rule it is applicable for everyone Has this business good for society apart from giving employment to few people?


UNMAIYA SONNEN
ஜூலை 10, 2024 10:10

Fitness Freak, disciplined athlete, controlled a sapiduvaru - ithu avaroda bio data. anna ooruku pub vaichu thararu.. why?


ديفيد رافائيل
ஜூலை 10, 2024 08:48

கட்சியில் இருந்து பணம் கொடுத்திருந்தா Police கண்டுக்காம இருப்பானுங்க. மானங்கெட்ட police department


moulee
ஜூலை 10, 2024 11:13

Please பொங்காதீங்க


Venkateswaran Rajaram
ஜூலை 10, 2024 08:44

என்ன ஒரு தொழில் பண்ணுகிறார் பாருங்க ...இவருக்கு கோடி கோடியாய் பரிசு வேறு


Senthoora
ஜூலை 10, 2024 08:13

சேரவேண்டிய கட்சியில் சேர்ந்தால் தப்பிடுவார்.


Pandi Muni
ஜூலை 10, 2024 09:07

காங்கிரஸ் கட்சியே இருக்காது பின்ன எங்க சேர்ந்தால்?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை