மேலும் செய்திகள்
வழக்கறிஞரை தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு
07-Jul-2025
ஓட்டேரி, காதலியின் தந்தையை தாக்கியவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓட்டேரி, மங்களபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி, 44. இவரது கணவர் ஜெய்சங்கர்; கார் ஓட்டுநர். இவர்களுக்கு 23 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் உறவினரின் மகனான தமிழ் செல்வன் என்பவரை, காதலித்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன், இளைய மகள் காதலனுடன் இருந்ததை ஜெய்சங்கர் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் தமிழ் செல்வன் ஜெய்சங்கரை தாக்கியுள்ளார். இது குறித்து, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், ஜெய்சங்கர் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறி அவரது வீட்டிற்கு சென்று, தமிழ்செல்வனின் உறவினர்கள் தகராறு செய்துள்ளனர். அப்போது ஜெய்சங்கரின் மூத்த மகளையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்தவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, கலைவாணி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டேரியைச் சேர்ந்த ஸ்டாலின், 43, என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
07-Jul-2025