உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளி மாணவி பிரசவம்; எட்டாம் வகுப்பு மாணவர் மீது வழக்கு

பள்ளி மாணவி பிரசவம்; எட்டாம் வகுப்பு மாணவர் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆண் குழந்தையை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கட்டப்பனை அருகே சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் வசித்தனர். அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தாயார் பிரிந்து சென்றார். தந்தையுடன் வசித்த மாணவி விடுமுறை நாட்களில் தாயார் வீட்டிற்கு செல்வதுண்டு. அவ்வாறு கடந்த கோடை விடுமுறையில் தாயார் வீட்டிற்கு சென்ற மாணவி, பள்ளி திறந்ததவுடன் தந்தை வீட்டிற்கு திரும்பியவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வந்தார்.கர்ப்பம்: இரு தினங்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி நிறைமாத கர்ப்பம் என தெரியவந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டப்பனை போலீசார் மாணவியிடம் விசாரித்த போது கடந்த கோடை விடுமுறையில் தாயார் வீட்டிற்கு சென்ற போது, அப்பகுதியை சேர்ந்த உறவினரான 14 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பம் அடைந்ததாக தெரியவந்தது. சம்பந்தப்பட்ட மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பிரசவம்: நேற்று முன்தினம் அதிகாலை மாணவிக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ள மாணவியின் உறவினர்கள் மறுத்து விட்டதால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை பராமரித்து வருகின்றது. சம்பந்தப்பட்ட மாணவி ஓரிரு நாட்களில் குழந்தைகள் நல குழுவிடம் ஆஜராக உள்ளார். அப்போது மாணவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி குழந்தை குறித்து முடிவு செய்யவும், மாணவரை சிறுவர் மறுவாழ்வு மையத்தில் அனுமதிப்பதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 01, 2025 20:51

மாணவரை சிறுவர் மறுவாழ்வு மையத்தில் அனுமதிப்பதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் ...... பார்த்து ..... இந்த மாணவன் அந்த மைய சூப்பர்வைசரையே ஆகே மோட் ன்னு சொல்லிட்டு ஜோலி முடிச்சுருவான் ....


ஆரூர் ரங்
பிப் 01, 2025 15:21

வெ மாறன் BAD படத்தை முன்கூட்டியே பார்த்திருப்பார்கள்.


Sampath Kumar
பிப் 01, 2025 10:22

புரு சோத்தம உன் புத்தி காலத்தை லத்திற்கு சமம் உங்க கடவுள் களின் அவதார லச்சனம் என்ன என்று பார்த்து விட்டு பேசு அம்புட்டும் ஆபாசத்தின் உச்சம் சமூக நீதி பற்றி ஏச உனக்கு அருகதை இல்லை


Venkatesan Ramasamay
பிப் 01, 2025 10:13

நிறைமாத கர்ப்பிணியின் உடல் மற்றும் முகம் மாற்றம் பெற்றவர்களுக்கு தெரியாது என்பது மிகவும் ஆச்சிரியமான செயலாகத்தான் இருக்கிறது. கலி முத்திடுச்சி..


Kanns
பிப் 01, 2025 09:59

These AntiSociety Crimes Increased Solely Due to SexHungry Girls-Boys by Increased SexyPorn SocialMedia-Cinema-Drama & CoEducations etc. Arrest All AntiSociety SexHungry Girls& Boys, Social Media etc etc


Pandi Muni
பிப் 01, 2025 09:17

ஈ.வே.ரா கால் பட்ட இடமெல்லாம் கற்பமாக்கப்படும் சிறுமிகள். கொடுமை.


Kasimani Baskaran
பிப் 01, 2025 08:48

கடவுள் தேசத்தில் கம்மிகள் ஆடிய ஆட்டத்தின் பலன் இது போல நெறியற்ற ஒரு சமுதாயம் உருவாகி வருகிறது.


Nagarajan D
பிப் 01, 2025 08:42

சினிமாவின் தாக்கம்... குழந்தைகளை சீரழித்துவிட்டது...


nathan
பிப் 01, 2025 08:30

அந்த குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி வருத்தமாக உள்ளது


Barakat Ali
பிப் 01, 2025 07:57

சொறியான் புகழ் பரப்ப காரணமான மாநிலம் ....