உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் வெகுமதி

பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் வெகுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை அளிப்போருக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. பயங்கரவாதிகள் நடமாட்டம், அவர்களின் இருப்பிடங்கள் குறித்து நடவடிக்கைகளை அறியும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை அளிப்போருக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அனந்த்நாக் காவல்துறை அறிவித்துள்ளது. தமது சமூகவலை தள பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது; கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அழிக்க வழிவகை செய்யும் எந்த ஒரு தகவலுக்கும் ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
ஏப் 24, 2025 09:19

வீரர்கள் என்று கோழைத்தனமானவர்களைத்தான் காணமுடிகிறது நிறைய அரசு அலுவலகங்களில் கூட...லஞ்சப்பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம், இது மதபைத்தியம் கொண்டவர்களின் கொலைக்கூட்டம் அதுதான் வித்யாசம். மொழிக்கொள்கையும் இது போன்றுதான் உள்ளது


Valagam Raghunathan
ஏப் 23, 2025 22:29

அவர்களுக்கும் வாதாட மூத்த வழக்கறிஞர்கள்? உச்ச நீதி மன்றத்தில் தயார்.


புதிய வீடியோ