உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.அமைச்சரவை கூட்டம்டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதி வாரிகணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து உள்ளது. மாநில அளவில் தனியாக கணக்கெடுப்பு நடத்த தேவையில்லை.

அரசியல் ஆதாயம்

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் எப்போதும் எதிராக இருந்தது. 2010 ல் பிரதமர் ஆக மன்மோகன் சிங், ஜாதிவரை கணக்கெடுப்பு குறித்து மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவளித்தன. காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஜாதி வாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தியது அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். சில மாநிலங்கள் ஜாதி வாரிகணக்கெடுப்பை நடத்தி உள்ளன. சில மாநிலங்களில் சிறப்பாக செய்து இருந்தாலும் வேறு சில மாநிலங்கள் அரசியல் கண்ணோட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு சமூகத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது . அரசியலால் நமது சமூக கட்டமைப்புக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். பீஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டன. தெலுங்கானா மாநிலத்திலும் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அளவில் ஜாதி வாரி மக்கள் தொகைகணக்கெடுப்பு நடத்தவேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறி வந்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களும் இந்த கோரிக்கையை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

KRISHNAN R
ஏப் 30, 2025 20:38

என்ன சொல்ல போகிறார்கள்.. எங்கள் இனம் மொத்த தொகையில்... இன்னும் முன்னேறவில்லை என்று கூறி... ஆளுக்கு இடஒதுக்கீடு. ஆனால்.வறிய நிலையில் இருக்கும் ஒரே ஒரு இனம் மட்டும்.... முன்னேறி... இருக்கும் என்று சொல்வார்கள்


m.arunachalam
ஏப் 30, 2025 20:09

பல புதிய பிரச்சனைகளை உருவாக்கும் . தெளிதல் நலம் .


Karthik
ஏப் 30, 2025 19:26

பொருளாதார ரீதியாக பின்தங்கியவரை முன்னேற்ற வேண்டும் எனில் ஜாதி வாரி மதம் வாரி கணக்கெடுப்பதை விட பொருளாதார ரீதியாக அவர்களை கணக்கெடுப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும். மேலை நாடுகளில் எல்லாம் பொருளாதார ரீதியாக மேல் தட்டு மக்கள், நடத்தட்டு மக்கள் கீழ்த்தட்டு மக்கள் என்ற வகையிலாக மூன்று பிரிவுகளாகவே பிரிக்கப்பட்டு இருக்கும். இதில் பொருளாதார ரீதியாக குறைந்த வருமானம் உடைய கீழ்த்தட்டு மக்களுக்கே அரசின் சலுகைகள் பெரும்பங்கு வழங்கப்படுகிறது . அதை ஏன் நாம் பின்பற்றக் கூடாது.?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 30, 2025 18:22

மற்ற உலக நாடுகள் எல்லாம் ஓட்டமாய் ஓடி முன்னேறி கொண்டு இருக்கையில் இந்தியா நொண்டிக் கொண்டு முன்னேற எத்தனையோ காரணங்களில் ஜாதியும் ஒரு முக்கிய காரணம்....!!!


kamal 00
ஏப் 30, 2025 18:12

இப்போ பாருங்க....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 30, 2025 18:07

ஜாதி என்பது ஒரு குறிப்பிட்ட ஜீன் வம்சத்தின் அடையாளம். நெல்லில், புல்லில், கோழியில், நாய்களில் பலவகை உள்ளது போன்றதே மனித ஜாதியும். ஒரு குறிப்பிட்ட இனம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக குழுவாக வாழ்ந்து, தனக்கென ஒரு வாழ்கை முறை சம்பிரதாயம், உணவு முறை, பழக்கவழக்கங்களை பின்பற்றும் தனக்கென ஒரு ஜீன் கூட்டத்தை உருவாக்கி அதற்கு என ஒரு பெயரும் கொடுத்து வாழ்ந்து வருகிறது. இப்படி பலநூறு இனங்கள் - ஜாதிகள் இந்தியாவில் உள்ளன. ஒருவரின் முகாடையாளத்தை வைத்து, பழக்கவழக்கத்தை வைத்து, வாழ்கை முறையை வைத்தே அவரின் ஜாதியை குறிப்பிட முடியும். ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் எல்லோரும் ஒரே ஜீன் கூட்டமாக மாறினால் மட்டுமே சாத்தியம். அது இயற்கைக்கு விரோதம். இயற்கையாக தோன்றியதை இயற்கையால் மட்டுமே அழிக்க முடியும். திராவிட மாயையை குப்பையில் போட்டுவிட்டு, எதார்த்தத்தை உணருங்கள் மக்களே. கண்டங்கள் தோறும், நாடுகள் தோறும், மாநிலங்கள் தோறும், மாவட்டங்கள் தோறும், மொழிகள் தோறும், வெவ்வேறு ஜீன் கூட்டங்கள் உள்ளன. அவற்றை அழிக்க நினைப்பவன் அறிவற்றவன் என்று சொல்வதைத் தவிர வேறு என்னவென்று சொல்வது?


Rajah
ஏப் 30, 2025 17:43

ஜாதிகள் இல்லையென்று வாதிடுபவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்பது ஏன் என்று புரியவில்லை. மனிதர்களை ஜாதிவாரியாக பிரிப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல என்பது என் கருத்து. பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட அனைவரையும் முன்னேற்றுவதே ஒரு அரசின் கடமை. இதற்கு ஜாதி, மதம், நிறம் எதற்கு? எந்தெந்த தொகுதிகளில் எந்த ஜாதி அதிகமாக உள்ளது என்று அறிந்து அதற்கேற்ப அந்த ஜாதி வேற்பாளர்களை நிறுத்துவற்கு வேண்டுமானால் இது உதவலாம். இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்பவர்கள், மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பது சமூகநீதிதானா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். மனிதர்கள் வாழக்கூடிய கிரகங்களில் மக்கள் குடியேறினாலும் அங்கும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பது சமூகநீதி என்பார்கள். விகிதாசாரம் என்பது பணம் படைத்த வர்க்கம், நடுத்தர வர்க்கம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று இருப்பதே நல்லது.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 30, 2025 18:14

பிராமணாள் சங்கம் தம்ப்ராஸ் இந்து சமாஜம் இன்னும் எத்தனையோ உண்டு. அவர்கள் நேரடியாக கோதாவில் இறங்காமல் .......


Muralidharan Swaminathan
ஏப் 30, 2025 17:14

இசை வேளார் முக்குலத்தோர் வன்னியர் அதிகம் பயன் பெற்றனர். ஆதி திராவிடர் பணக்காரன் ஆகிவிட்டனர் தமிழ் பிராமண 20 லக்சம் கீழ். ஒரு இனம் அழியாத பெருமை திராவிடம் பெறுகிறது


GMM
ஏப் 30, 2025 17:09

சாதிவாரி கணக்கெடுப்பு சலுகை வழங்க உதவும். சலுகை ஓட்டாக மாறும். கலப்பு திருமணம், மத மாற்றம் நிகழும் போது , மதம், சாதியை அங்கீகரிக்கும் சட்ட அமைப்பு நிறுவ வேண்டும். அரசு சாதியை அடையாள படுத்த முடியாது. சமூகம் தான் அடையாள படுத்த முடியும். இனி மத அடிப்படையில் கோரிக்கை காங்கிரஸ் எழுப்பும். மக்கள் தொகை அடிப்படையில் சலுகை பெரும் சாதி, மதம் மக்களிடம் வரி வசூல் அதே விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும் . பிஜேபி ஒரு திடத்துடன் தான் ஒப்புதல்?


Anbu Raj
ஏப் 30, 2025 17:03

தமிழ்நாட்டுல எப்படி எடுப்பீங்க ????? அதான் சாதியை ஒளிச்சிடுச்செ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை