உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜானிவாக்கர் நிறுவனத்துக்கு சலுகை கார்த்தி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு

ஜானிவாக்கர் நிறுவனத்துக்கு சலுகை கார்த்தி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு

புதுடில்லி : 'ஜானிவாக்கர்' விஸ்கியை இந்தியாவில் விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகக் கூறி, லஞ்சம் வாங்கியதாக, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு தொடர்ந்து உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரத்தின் மகனான கார்த்தி, தற்போது லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். தன் தந்தையின் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=flzrvsbc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கார்த்தி மீது, சி.பி.ஐ., புதிய வழக்கு பதிவு செய்து உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், 'டூட்டி பிரீ' எனப்படும் வரியில்லாத வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்கு, இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகமே அனுமதி அளிக்கும்.கடந்த 2005ல், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'டியாஜியோ ஸ்காட்லாந்து' நிறுவனத்தின் தயாரிப்பான, ஜானிவாக்கர் விஸ்கி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.இந்தியாவில் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில், 70 சதவீதம் இந்த விஸ்கியே இடம்பெற்றிருந்தது.இந்த தடையை நீக்குவது தொடர்பாக கார்த்தியின் உதவியை, அந்த நிறுவனம் நாடியுள்ளது. இதற்காக, அவர் நடத்தி வரும் 'அட்வான்டேஜ் ஸ்டார்டஜிக் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துக்கு, பிரிட்டன் நிறுவனம், 13 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளது.ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் அந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.இந்த முறைகேட்டில், கார்த்தி மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான பாஸ்கர்ராமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Veeramani Ramalingam
ஜன 10, 2025 18:33

He will escape from this case also because of his father and mother lawyers influence. And the innocent public including the opposition party will forget this


Neutrallite
ஜன 10, 2025 10:25

எல்லா துறைகளிலும் ஆட்கள் உள்ளனர். 90 களில் இருந்து அமைச்சராக இருந்ததால், தன்னை போன்ற ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் கொண்டு எல்லா துறைகளிலும் நீதித்துறை உட்பட ஆட்களை வைத்து கொண்டிருப்பதால், மற்ற அதிகாரிகள் நினைத்தாலும் தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 10:12

தன்னுடைய வாரிசையாவது நல்லபடியா வளர்த்திருக்கலாம் .....


Ramona
ஜன 10, 2025 09:10

10 தோட 11 இது ,ஒன்னும் நடக்காது.சும்மா ஒரு செய்தி.


N.Purushothaman
ஜன 10, 2025 08:19

பெரும்பாலான ஆலோசனை நிறுவனங்கள் எல்லாம் இப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யும் கூடாரங்களாக மாறிவிட்டது ..பினராயி விஜயன் மகளும் இப்படித்தான் ஒரு நிறுவனம் தொடங்கி இப்போது வழக்கில் மாட்டி கொண்டு உள்ளார் ....


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜன 10, 2025 09:09

அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு எப்படியோ அப்பாவையும் மகனையும் சீக்கிரம் உள்ளே புடிச்சு போட்டால் உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்..


N.Purushothaman
ஜன 10, 2025 11:31

நல்லா சொன்னீங்க ...செல்வந்தர் குடும்பத்துல பிறந்தும் அரசாங்க பணத்தை ஆட்டையை போடறது மகா கேவலமான ஒன்னு ...


Kasimani Baskaran
ஜன 10, 2025 07:02

அரசாங்கத்தையே ஒரு கமிஷன் மண்டி போல நடத்தியிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் மட்டுமல்ல கள்ளத்தனம் செய்வதிலும் நிபுணர். குட்டி நூறடி பாயும்... எவ்வளவுதான் பணமிருந்தால் இவர்களுக்கு கமிஷன் முறையில் திருடுவதில் அலாதி பிரியம்.


K V Ramadoss
ஜன 10, 2025 02:55

ஆஹா என்ன வேகம் நமது C.B.I. ஆமாம் மற்ற பல கேஸ்கள் உடைப்பில் போடப்பட்டனவா? C.B.I. ஊழல் வழக்கில் எத்தனை அரசியல்வாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறது ?


Palanisamy Sekar
ஜன 10, 2025 02:46

2005 இல் செய்த லஞ்ச ஊழலுக்கு சபாஷ் இருபதாண்டுகள் கழிந்தாலும் விடாது துரத்தும் லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இப்போதாவது உறுதியுடன் செய்வீர்கள் என்று நம்புவோம். அப்பா நிதியமைச்சர்ர்ர்ர்ர். மகனுக்கு சலுகைகள் இதுபோல எவ்வளவு நிறுவனங்களுக்கு கொடுத்து நமது வரிகளை ஏய்த்தார்களோ தெரியவில்லை. இவ்வளவு லஞ்சங்களை வாங்கிக்குவித்துவிட்டுத்தான் நம்ம சிவகங்கை சீமான் அப்பப்போ துள்ளி குதித்தாரோ? இனிமேல் கார்த்தி ஜானிவாக்கர் கார்த்தி என்றே அழைக்கப்படுவார். ஜாவாகார்த்தி ன்னும் அழைக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை