உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு; வெளியானது புது அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு; வெளியானது புது அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 2026ம் ஆண்டு முதல் இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த உள்ளது. 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iwfpfxbn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் கூறியதாவது: 2026ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ., அங்கீகரித்துள்ளது. முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும். முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும்.முதல் தேர்வில் கலந்து கொள்வது கட்டாயம். இரண்டாம் தேர்வில் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 25, 2025 21:23

தமிழத்தில் கல்வி துறையை இந்த திராவிட விடியல் கும்பல்கள் கெடுத்து குட்டிசுவர் ஆக்கி விட்டனர், மற்ற மாநிலங்கள் ஒப்பிடும்போது கல்வி தரம் தமிழகத்தில் குறைந்து வருகிறது, 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட தமிழ் மாதங்கள் பெயர்களை வரிசையாக செல்ல தெரியவில்லை, இந்த அழகில் நாங்கள் தான் தமிழை வலர்த்தோம் என கூவுகிறது இந்த திராவிட கட்சிகள், வெட்கக் கேடு.


Ramesh Sargam
ஜூன் 25, 2025 20:14

இது ஒரு நல்ல அறிவிப்புதான். ஆனால் இதற்கும் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சியினர் ஏதாவது dirty politics செய்வார்கள். அதன் வாலை நிமிர்த்தமுடியுமா?


Nada Rajan
ஜூன் 25, 2025 19:07

வருங்காலத்தில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தான் அனைத்து வாய்ப்புகளும் கிட்டும் போல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை