மேலும் செய்திகள்
மோந்தா புயல் எதிரொலி; நாளை 43 ரயில்கள், விமானங்கள் ரத்து
1 hour(s) ago
மாணவர்கள் கவனம்: நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள்
2 hour(s) ago | 2
பெங்களூரு : “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போல, மீண்டும் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரி பிரசாத்திடம், சி.சி.பி., போலீசார் விசாரணை நடத்தியதற்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் தான் காரணம்,” என, அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.அயோத்தி ராமர் கோவில் திறப்பு அன்று, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போல, மீண்டும் நடக்க வாய்ப்பு இருப்பதாக, சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறி இருந்தார்.கலவரத்தைத் துாண்டி விடும் வகையில் பேசுவதாக, அவர் மீது பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். 'அவரிடம் விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.இதையடுத்து, ஹரிபிரசாத்திடம், சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, மாநில அரசு உத்தரவிட்டது. நேற்று முன்தினம் ஹரிபிரசாத்திடம், சி.சி.பி., அதிகாரிகள் விசாரித்தனர்.இதனால், அதிருப்தி அடைந்த அவர், மாநிலத்தில் நடப்பது காங்கிரஸ் அரசா அல்லது ஆர்.எஸ்.எஸ்., அரசா என்று கேள்வி எழுப்பினார். தேவைப்பட்டால் என்னை கைது செய்யப்பட்டும் என்றும், கோபத்தை வெளிப்படுத்தினார். ஏன் இவ்வளவு ஆர்வம்?
இதுகுறித்து கர்நாடகா கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:கர்நாடகாவில் நடப்பது உத்தர பிரதேச அரசு இல்லை. பசவண்ணர் கொள்கைகள், அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு நடக்கும் அரசு. எது செய்ய வேண்டும் என்றாலும், சட்டப்படி செய்ய வேண்டும். கோத்ரா சம்பவம் போல மீண்டும் நடக்க, வாய்ப்பு இருப்பதாக கூறிய ஹரி பிரசாத்திடம், விசாரணை நடத்தப்பட்டதா? என, மாநில அரசிடம், கவர்னர் தாவர்சந்த் கெலாட் பல முறை கேட்டு விட்டார். ஆர்வம்
இதனால், ஹரி பிரசாத்திடம் விசாரணை நடத்த உள்துறை முன்வந்தது. எங்கள் கட்சியின் தலைவரை, நாங்களே தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமா? இந்த விஷயத்தில் கவர்னருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என்பது தெரியவில்லை. கவர்னரை யார் இயக்குகின்றனர் என்பது தெரிய வேண்டும். வேட்பாளர் பட்டியல்
பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், கவர்னர்களை வைத்து ஆட்சி செய்ய, மத்திய அரசு முயற்சி செய்கிறது. பா.ஜ., ஆட்சியில் இருந்ததை விட, தற்போது சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது.வாரிய தலைவர்கள் பதவி நியமனம் இழுத்தடிப்பதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் இருப்பதாக, ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. யார் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். அவர்களிடம் நானே நேரில் சென்று பேசுகிறேன்.வரும் லோக்சபா தேர்தலில் கலபுரகி தொகுதியில், மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவாரா என்பது எனக்கு தெரியாது. அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். நான் கலபுரகி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மட்டுமே. எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்களின் கருத்துகளை கேட்டு, வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
2 hour(s) ago | 2