உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: யூசுப் பதானுக்கு கோர்ட் அட்வைஸ்

பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: யூசுப் பதானுக்கு கோர்ட் அட்வைஸ்

காந்தி நகர் : 'பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல' எனக் குறிப்பிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணமுல் காங்., - எம்.பி.,யுமான யூசுப் பதானை, 'ஆக்கிரமிப்பாளர்' என்றும் அறிவித்தது. குஜராத்தின் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யூசுப் பதான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இவர், மேற்கு வங்கத்தின் பஹராம்பூர் தொகுதி லோக்சபா எம்.பி.,யாகவும் பதவி வகிக்கிறார். வதோதரா மாவட்டத்தின் தண்டல்ஜா என்ற பகுதியில், யூசுப் பதானுக்கு சொந்தமாக வீடு உள்ளது. இதையொட்டிய அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து அவர் பயன்படுத்தி வருகிறார். நிலத்தை காலி செய்து ஒப்படைக்கும்படி, 2012ல், யூசுப் பதானுக்கு வதோதரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், 'நானும், என் சகோதரர் இர்பான் பதானும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள். 'எனவே, குடும்பத்தின் பாதுகாப்பை கருதி சர்ச்சைக்குரிய நிலத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். அதற்குரிய பணத்தை செலுத்த தயாராக இருக்கிறேன்' என, குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மோனா பட் பிறப்பித்த உத்தரவு: எம்.பி., மற்றும் பிரபலம் என்ற அடிப்படையில், சட்டத்தை மதித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியது, யூசுப் பதானின் பொறுப்பு. ஆனால், அவரே சட்டத்தை மீறி உள்ளதை ஏற்க முடியாது. பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அனைவரும் சட்டத்துக்கு முன் சமம். அத்தகைய நபர்களுக்கு சலுகை அளிப்பது சமூகத்திற்கு தவறான செய்தியை அனுப்புகிறது மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அரசு நிலத்தை ஆக்கிரமித்த யூசுப் பதான், ஒரு சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர். அவரிடம் இருந்து ஆக்கிர மிப்பு நிலத்தை வதோதரா மாநகராட்சி உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

surya krishna
செப் 17, 2025 13:28

வளர்ந்த விதம் அப்படி? செடியில் என்ன உரம் இடுகிறார்களோ அதுதான் கனியில் தெரியும் .....


Anand
செப் 17, 2025 12:23

அப்படி என்ன?


Rathna
செப் 17, 2025 11:17

வக்ப் வகையறா. இங்கிருந்து 2000 கிலோ மீட்டர் தாண்டி போயி பங்களாதேஷி கூட்டங்களுடன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்பதில் இருந்து அவன் எப்படி பட்டவன் என்பது தெரிகிறது. கடுமையான பெனால்டி மற்றும் வாடகை விதிக்க வேண்டும். சட்டத்தை மதிக்காத கூட்டம் அது.


Srinivasan M
செப் 17, 2025 09:29

இப்போது மேல் முறையீடு செய்வார்கள் என தெரிகிறது. உச்ச நீதி மன்றம் சென்று பெறுவார்.


Sesh
செப் 18, 2025 16:42

உச்ச நீதி மன்றம் என்றும் ஆதரவு அளிக்கும் .


நிக்கோல்தாம்சன்
செப் 17, 2025 07:08

ஊடகநீதி அரசரும் இருக்கலாம்


raja
செப் 17, 2025 06:13

ஆகா ஆகா அருமையான தீர்ப்பு..இது குஜராத்தில்...ஆனால் RSB கூறியபடி அவர்கள் போட்ட பிச்சையில் வந்தவர்கள் தீர்ப்பை நிருத்திவைத்து பதவி பிரமாணம் செய்து வை என்று மிரட்டல் வேறு.. இதுவும் தீர்ப்பு இதையும் பொதுமக்கள் அமைதியாய் வேடிக்கை பார்க்க வேண்டும்...


Iyer
செப் 17, 2025 05:00

2012 : நோட்டீஸ் அனுப்பியது மாநகராட்சி - ,மனையை காலி செய்ய 2025 நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது இதை எதிர்த்து மேல் மனு இவர் ஒருவேளை செய்யலாம். அப்படி மேல்முறையீடு செய்தால் : 2075 ல் தீர்ப்பு வரலாம். இதுதான் நீதித்துறை. இவர்கள் ஜனாதிபதிக்கு அறிவுரை சொல்கிறார்கள்.


Tetra
செப் 17, 2025 17:50

மக்கள் தீர்ப்பை ஏற்காத அ நீதித்துறை


Vasan
செப் 17, 2025 04:29

Very good judgement, but it should not have taken 12 years to deliver this judgement.


Mani . V
செப் 17, 2025 04:27

ஆனால், இது பாஜ க வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சியான திமுக வினருக்கு மட்டும் பொருந்தாது.


Kasimani Baskaran
செப் 17, 2025 04:02

உச்சபஞ்சாயத்தார் கூட சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால் மத நம்பிக்கையை கிண்டல் செய்யுமளவுக்கு பெரிய பஞ்சாயத்தார் ஆகிவிட்டார்.


சமீபத்திய செய்தி