உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தினார்.கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தின் 3 பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் பேசியதாவது: வயநாடு நிலச்சரிவு பகுதிகளில் மீட்பு பணிகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை உடனடியாக மீட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறு குடியமர்வு திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வரைபடம் தயாரிப்பு

நிலச்சரிவு சம்பவத்திற்கு உடனடியாக நிவாரணத்தொகை விடுவிக்கப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. நிலச்சரிவில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து வரைபடம் தயாரிப்பது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விரிவான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ''வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Sivagiri
ஆக 05, 2024 13:14

கேரளா சிஎம்-ஐ சந்திக்கவில்லையா, மனமில்லையா, தைரியம் இல்லையா, நேரம் இல்லையா, - போகட்டும் விடு.., இருக்கவே இருக்காரு மோடி - அங்க போயி உதார் விடுவோம்-னு கிளம்பி வந்துட்டீங்களா . . .


S.Bala
ஜூலை 31, 2024 10:14

காங்கிரஸ் MP அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ராஜினாமா செய்ததால் அவர்கள் கட்சி நிதியிலிருந்து ரூ.பத்து கோடி வழங்க வேண்டும் .


R.Varadarajan
ஜூலை 31, 2024 06:45

பரம ஏழைக்கட்சியின் தேர்ந்தெடுக்கப்படாத பரம்பரை தலைவர் ராகுல் அவரை தேர்ந்தெடுத்த வயநாடு தொகுதி மக்களுக்கு அவருடைய குடும்ப சொத்திலிருந்து நிவாரண உதவி கொடுக்கலாமே வெற்று நீலிக்கண்ணீர் மட்டும் போதுமா?


Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:07

மத்திய அரசு தன்னுடைய கடமையை செய்யும். நீங்கள் அங்கு தேர்தலில் நின்று பலமுறை வெற்றிபெற்றுள்ளீர்கள். அதற்காகவாவது உங்கள் கட்சி பணத்தில் இருந்து செலவு செய்து உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவ வேண்டும். அதை முதலில் செய்யுங்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 30, 2024 19:39

மத்திய அரசு விரைந்து செயல்பாட்டிற்கும். ஆனால் சும்மா இல்லாமல் ராகுல் வாயை கொடுத்ததன் விளைவாக மத்திய அரசு அதன் வேலையை மெதுவாகத்தான் இனி செய்யும். தேசத்துரோகியை தேர்ந்தெடுத்தால், இப்படித்தான் புறக்கணிக்கப்படுவார்கள்.


R K Raman
ஜூலை 31, 2024 14:30

மோடிஜி கவலைப்படாமல் தன் கடமையை செய்வார்


sundarsvpr
ஜூலை 30, 2024 19:02

இது தேசிய பேரழிவு. மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்பதனை உடனே செய்யவேண்டியது படி படியாய் செய்யவேண்டியது என்பதனை மத்திய அரசு செய்யும் . மாநில அரசும் மத்திய அரசுக்கு உறுதுணையாய் இருக்கும். ராகுல் வேண்டுகோள் முன்பே நிவாரப்பணிக்கு பேரிடர் குழு சென்றுவிட்டது.ஆக்க பூர்வமான யோசனை சம்பந்தப்பட்ட அரசுகளுடுன் நேரில் கலந்து பேசுவது நல்லது.


பேசும் தமிழன்
ஜூலை 30, 2024 18:10

நீ நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம்.... மோடி அவர்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் உதவி செய்வார்... நீ போய் அவர்கள் செய்யும் வேலைக்கு..... லேபிள் ஓட்ட வேண்டாம் !!!


C.SRIRAM
ஜூலை 30, 2024 18:06

வழக்கம் போல


கல்யாணராமன்
ஜூலை 30, 2024 17:11

ஏற்கனவே அங்கே பேரிடர்மீட்பு குழு சென்று துரித பணியில் ஈடுபட்டுள்ளது.


G Mahalingam
ஜூலை 30, 2024 17:05

பைத்தியமா அல்லது சிறுபிள்ளைதனமா ஒன்றும் புரியவில்லை. ராகுல் சொல்லிதான் மத்திய அரசு ஆட்களை அனுப்பிகிற மாதிரியும் . இவரால் காங்கிரஸ் பாதாள குழிக்கு போய் விடும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ