உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய நேரடி வரி வசூல் ரூ.19.60 லட்சம் கோடி: 10 ஆண்டில் 182 சதவீதம் உயர்ந்து சாதனை!

மத்திய நேரடி வரி வசூல் ரூ.19.60 லட்சம் கோடி: 10 ஆண்டில் 182 சதவீதம் உயர்ந்து சாதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மோடி அரசின் 10 ஆண்டு காலத்தில், மத்திய நேரடி வரி வசூல் 182 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015ம் நிதியாண்டில் 6.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நேரடி வரி வசூல், 2024ம் நிதியாண்டில் ரூ.19.60 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.வருமான வரித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தனி நபர் வருமான வரி வசூல், 294.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015ம் நிதியாண்டில், 2.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தனி நபர் வருமான வரி, 2024ம் நிதியாண்டில் 10.45 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.வருமான வரி தாக்கல் 2015ம் ஆண்டில் 4.04 கோடி கணக்கு என்ற அளவில் இருந்தது, 2024ம் ஆண்டில் 8.61 கோடி கணக்குகளாக அதிகரித்துள்ளது.வருமான வரி தாக்கல் செய்த தனி நபர்களின் எண்ணிக்கை, 3.74 கோடியில் இருந்து 8.13 ஆக அதிகரித்துள்ளது.கார்ப்பரேட் நிறுவன வரி வசூல் 2015ல், 4.28 லட்சம் கோடியாக இருந்தது, 2024ல் 9.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kasimani Baskaran
அக் 18, 2024 06:01

வலுவான பொருளாதாரமும், தொய்வில்லாத வரி வசூலும் இருந்தால் இந்தியா வெகு வேகமாக, நேர்த்தியாக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை.


தாமரை மலர்கிறது
அக் 17, 2024 23:41

மிக அருமை. வரி உயர்கிறது என்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்கிறது என்று அர்த்தம். அடுத்த ஐந்தாண்டில் மேலும் இருமடங்காக உயரும். தென் மாநில மக்களிடம் பணப்புழக்கம் மிக அதிகமாக உள்ளது. அதனால் வடமாநிலங்களில் ஜிஎஸ்டி வரியை பாதியாக குறைத்தால், அனைத்து இடங்களிலும் சீரான வளர்ச்சி ஏற்படும். இதனால் பொருளாதாரம் பெருகி, வடமாநில மக்களும் அதிக அளவில் ஜிஎஸ்டி செலுத்துவார்கள். அதுவரை தென் மாநிலங்களில் ஜிஎஸ்டியை இன்னும் இருபது சதவீதம் ஏற்றுவது நல்லது.


ராமகிருஷ்ணன்
அக் 17, 2024 22:05

இந்த செய்தி இண்டி கூட்டணி கும்பல், திமுகவுக்கு கை அரிப்பை கொடுக்கும்


Ramesh Sargam
அக் 17, 2024 21:45

இதைப்படிக்கும் தமிழக முதல்வர் உட்பட மற்ற அமைச்சர்கள் உடனே தமிழகத்துக்கு வரவேண்டிய பங்கு வரவில்லை என்று பொங்குவார்கள் பாருங்க.


Ganesh
அக் 17, 2024 21:20

மக்கள் வயித்துல அடிச்சி புடுங்கும் அரசாங்கம்


கனோஜ் ஆங்ரே
அக் 17, 2024 21:20

மக்களை துன்புறுத்தி வரி வசூல் செய்துவிட்டு... அதனை சாதனையாக சொல்வது நியாயமா...? தகுமா...? அடுக்கமா...? இதற்கு ஒரே பதில்தான்... அய்யன் திருவள்ளுவன் அன்றே சொன்ன குறள் 552: “ வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு”


ஆரூர் ரங்
அக் 17, 2024 22:01

தமிழக அரசின் வருவாயும் அதிகரித்துள்ளதே. அப்போ அதுவும் இப்படி வந்ததுதானா?


rama adhavan
அக் 18, 2024 03:48

இலவசங்களை முற்றிலும் ஒழியுங்கள். வரி விகிதம் தானே குறையும்.


Dhurvesh
அக் 17, 2024 20:58

எல்லாம் ஏழைகளின் கண்ணீர் , CORPORATE களுக்கு வரி சலுகை வரி குறைப்பு , அனால் ஏழைகளுக்கு வரி உயர்வு , இந்த 182 % உயரவு ஏழைகளின் கண்ணீர்


Nallavanaga Viruppam
அக் 17, 2024 22:13

4.28 இல் இருந்து 9.11 க்கு உயர்ந்து இருப்பது கண்களுக்கு தெரியவில்லையா?


ஆரூர் ரங்
அக் 18, 2024 11:21

சுற்றியுள்ள நாடுகளை விட கார்ப்பரேட் வரி குறைவாக இருந்தால் தான் அன்னிய முதலீடு இங்கு வரும். இதனால்தான் அமெரிக்காவிலே முதலீட்டை ஈர்க்கச் சென்ற ஸ்டாலினே கார்பரேட் வரிக் குறைப்பை எதிர்க்கவில்லை.


கனோஜ் ஆங்ரே
அக் 19, 2024 11:07

ஒண்ணு இருக்குன்னு சொல்லணும், இல்லையென்றால் இல்லை என்று மறுக்கணும். அதவிட்டுவிட்டு, பக்கத்துல இருக்குறவன் முதுலேயும் அழுக்கு இருக்கு..சொல்கிறார்கள்..


sankaranarayanan
அக் 17, 2024 20:56

நிதி அமைச்சரையும் அவர்களது அமைச்சர் அலுவலர்களையும் முக்கியமாக மக்களே பாராட்ட வேண்டும் வரி ஏய்ப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது இன்னும் வரி கட்டாதவர்களை நாட்டின் நலம் கருதி அவர்களுக்கு பன்முறை பலவிதமாக எடுத்துரைத்து வரி கட்டுவதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும்


ajp
அக் 17, 2024 20:55

வேதனை


rama adhavan
அக் 18, 2024 03:51

இலவசம் தானே? தன்மானம் உள்ளவர் இலவசத்தை தொட மாட்டார். உழைத்து அதில்தான் செலவு செய்வார்.


ஆரூர் ரங்
அக் 17, 2024 20:27

விற்பனை வரி, வாட் போல ஜிஎஸ்டி யை எளிதில் ஏமாற்ற முடியாது. இதன் உடன் விளைவாக வருமான வரி, கார்ப்பரேட் வரிகளை ஏமாற்றுவது மிகக் கடுமையாக உள்ளது. மற்றபடி வரி விகிதங்களை குறைத்தும் வசூல் கூடியிருப்பது ஆச்சர்யமான சாதனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை