உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிற்கு எதிரான விரோதப்போக்கு: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்

இந்தியாவிற்கு எதிரான விரோதப்போக்கு: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் அதன் நிருபர் இந்தியாவிற்கு எதிராக விரோதப்போக்கை வெளிப்படுத்துகின்றனர், '' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற நாளிதழ் சில நாட்களுக்கு முன்னர் செய்தி ஒன்றை வெளியிட்டது.அதில், மாலத்தீவு அதிபராக இருக்கும் முயிசுவை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர , அவரது கட்சி எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி இந்தியாவிடம் கேட்டது எனக் கூறப்பட்டு இருந்தது. மேலும், பாகிஸ்தானுக்குள் புகுந்து லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகளை இந்தியா கொன்று வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.மாலத்தீவு தொடர்பான செய்திக்கு மாலத்தீவு எதிர்க்கட்சி மறுப்பு தெரிவித்தது. அது பற்றி தங்களுக்கு தெரியாது. மாலத்தீவின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக கூறியது.இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பத்திரிகை மற்றும் நிருபர் இருவருமே இந்தியா மீதான விரோதப் போக்கை வெளிப்படுத்துவதாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களின் நடவடிக்கையை அனைவரும் பார்க்க வேண்டும். அவர்களின் நம்பகத்தன்மையை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனக்கூறினார்.பாகிஸ்தான் தொடர்பான கேள்விக்கு ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ,' உங்கள் வீட்டு முற்றத்தில் பாம்பை வைத்துக் கொண்டு அது உங்கள் அண்டை வீட்டாரை மட்டும் கடிக்கும் என எதிர்பார்க்கக்கூடாது' எனக்கூறியதை நினைவுபடுத்துகிறேன் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
ஜன 03, 2025 22:14

இதன்மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின், குறிப்பாக இந்திய மற்றும் பாக் முஸ்லிம்களைத் தூண்டிவிட மேற்கத்திய மீடியா முயல்கிறது .... இதற்கு இந்தியாவின் தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப் பட்டுள்ளது .... பைடன் பதவிக்காலம் முடிந்தாலும் அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாது .... உள்நாட்டிலேயே நிகழும் தீவிரவாதத் தாக்குதலை முதலில் அமெரிக்கா தடுத்துக்கொள்ளட்டும் ....


Karthik
ஜன 03, 2025 21:53

தெளிவான சிந்தனை செயலுடைய வெளியுறவு துறை. மேலும் சிறக்கட்டும்..


GMM
ஜன 03, 2025 21:29

வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ் .. போன்றவை முன்பு போல் இல்லை. நீதி இல்லாத நிதி பெற்று நடப்பவை? நம்மூர் இந்து ,நக்கீரன் போன்றவை. பேரளவில் கடித்தால் போதும். அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் மீது அமைதி மார்க்க பார்வை பட்டுவிட்டது. டிரம்ப் கையில் அமெரிக்க /கனடா / கிரீன்லாந்து... பாதுகாப்பு. இஸ்ரேல் கையில் ஐரோப்பா பாதுகாப்பு. பிஜேபி கையில் இந்திய பாதுகாப்பு. மாறினால், 2025 ஆண்டு உலகிற்கு கடினமாக இருக்கும்.


sankaranarayanan
ஜன 03, 2025 21:05

அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் அதன் நிருபர் இந்தியாவிற்கு எதிராக விரோதப்போக்கை வெளிப்படுத்துகின்றனர் அவர்கள்மீது உடனே நமது மத்திய அரசு பிடிவாரண்ட் ஏன் பிறப்பிக்கக்கூடாது எப்படி அவர்கள் அத்தானுக்கு செய்தார்களோ அதையே நாம் அவர்களுக்கும் திரும்ப செய்யலாமே.


Barakat Ali
ஜன 03, 2025 22:16

யார் ????


SUBBU,MADURAI
ஜன 03, 2025 20:47

The New York Times, USA Today, Los Angeles Times, The Washington Post, These are all RSB media in America.


சமீபத்திய செய்தி