உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்குங்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்குங்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உடனடியாக போர் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lfh3djuq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த இலக்கின் மீதும் தாக்குதல் நடத்தும் சுதந்திரத்தை, முப்படைகளுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.இந்நிலையில், போர் பாதுகாப்பு தொடர்பான ஒத்திகைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:மாநிலங்களில் மே 7ம் தேதி போர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும். விமான தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என சரி பார்க்க வேண்டும்.போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.'கிராஷ் பிளாக் அஷட்' நடைமுறைகள் தொடர்பாகவும், முக்கிய கேந்திரங்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.மீட்பு திட்டங்கள் தொடர்பான ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வட மாநிலங்களில் ஏற்கனவே, சில போர் ஒத்திகைகள் நடந்து வருகின்றன. தற்போது மற்ற மாநிலங்களுக்கும் இத்தகைய அறிவிப்பை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
மே 05, 2025 23:37

தேவை இல்லாத ஜாதி சர்வேவை போன்று, போர் ஒத்திகையும் தேவை இல்லாதது. பாகிஸ்தானுடன் இந்தியா நேரடியாக சண்டைக்கு போவது, சீனாவைத்தான் குஷிப்படுத்தும்.


மீனவ நண்பன்
மே 05, 2025 22:02

இந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் பொதுவாக பொருட்களை பதுக்கி வைப்பது தானே வழக்கம்


Barakat Ali
மே 05, 2025 20:59

எங்க துக்ளக்கார் தேர்தல் பணிகளில் பிசி .... டிஸ்டர்ப் பண்ணாதீங்க .....


GMM
மே 05, 2025 20:07

போர் காலங்களில் மக்களை தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநில நிர்வாக பாதுகாப்பில் விட வேண்டாம். நிதி நெருக்கடி அதிகம். தேச விரோதிகள் புகலிடம். சட்டம் ஒழுங்கு, தீயணைப்பு, மருத்துவம், முக்கிய கேந்திரிய பாதுகாப்பு போர் முடியும் வரை மத்திய அரசு மற்றும் மத்திய போலீஸ் பாதுகாப்பில் இருக்க வேண்டும். சிறிய வெள்ளத்தை சமாளிக்க தெரியாது. போரை சமாளிக்க மாட்டார்கள். இலங்கை வழியாக எளிதில் பகைவர் ஊடுருவி விடுவர். திராவிடம் சிறுபான்மை மக்கள் என்று பாகிஸ்தானியரை விருந்தினராக ஏற்கும்? மம்தா பானர்ஜிக்கு வங்கதேச தீவிரவாதிகள் உறவு முறை?


Sivak
மே 05, 2025 22:13

உண்மை .. இவனுகளை நம்ப முடியாது


Ramesh Sargam
மே 05, 2025 19:47

தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒத்திகை வேறுவிதமாக இருக்கும். ஆம், அங்குள்ள அந்த அமைதி மார்க்கத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஹிந்துக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது.


Sambath
மே 05, 2025 21:50

முற்றிலும் உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை