உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர்பன் விஸ்கிக்கான இறக்குமதி வரி 50 சதவீதம் குறைத்தது மத்திய அரசு

போர்பன் விஸ்கிக்கான இறக்குமதி வரி 50 சதவீதம் குறைத்தது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை 50 சதவீதம் இந்தியா குறைத்துள்ளது. பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்புக்கு முன்னதாகவே (பிப்.,13ம் தேதி) இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, மதுபானம் உள்ளிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று தாயகம் திரும்பினார். ஆனால், சந்திப்பிற்கு ஒருநாள் முன்பாகவே, அமெரிக்காவின் போர்பன் விஸ்கிக்கான இறக்குமதி வரி 50 சதவீதமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கான சுங்கவரி 50 சதவீதம் மற்றும் கூடுதல் வரி 50 சதவீதம் என மொத்தம் 100 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, இந்த வரி 150 சதவீதமாக இருந்தது. இந்த வரி விதிப்பு போர்பன் விஸ்கிக்கு மட்டும் தான் என்றும், மற்ற மதுபானங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த போர்பன் விஸ் தயாரிப்பாளர்களுக்கு நல்ல பலனடைய உள்ளனர். ஏனெனில், இந்தியாவுக்கு போர்பன் விஸ்கியை ஏற்றுமதி செய்யும் முன்னிலை நாடாக அமெரிக்க திகழ்கிறது. கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும் 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர்பன் விஸ்கியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 20:13

விஸ்கி விலைகள் குறைவதற்கு நடவடிக்கை எடுத்த பாஜக ஒன்றிய அரசை அண்ணாமலை பாராட்டுவாரா??


அப்பாவி
பிப் 15, 2025 17:38

குஜராத்துலேயே எல்லா விஸ்கியும் வித்து தீந்துரும். கள்ளச்சாராயம் குறையும். மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விஸ்கி மலுவாக் கிடைக்கும்.


abdulrahim
பிப் 15, 2025 14:34

டாஸ்மாக் ஐ பற்றி நாள்தோறும் தூற்றும் சங்கி வாய்கள் அமெரிக்க விஸ்க்கிக்கு வரி குறைத்தது பற்றி பேசாமல் இறுக்கி அடைத்துக்கொள்ளும்.


Kumar Kumzi
பிப் 15, 2025 15:54

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய மூர்க்கனுக்கு இந்தியாவில் என்னடா வேல


visu
பிப் 15, 2025 16:38

பச்சை ஓநாய்கள் ஊளையிடுவதிலேயே தெரியவில்லையா அவர் நாட்டுக்கு தேவையானதை செய்கிறார் என்று இந்தியா ஏற்றுமதி செய்வது அதிகம் அமெரிக்காவிலிருந்து இரகுமதி செய்வது குறைவு


Anand
பிப் 15, 2025 13:20

டாஸ்மாக் விற்பனை மேலும் அதிகரிக்கும்... மாடல் அரசுக்கு கொண்டாட்டம் தான்


Barakat Ali
பிப் 15, 2025 12:57

மேல்தட்டு மக்கள் அருந்தும் அமெரிக்க மதுவுக்கு இறக்குமதி வரி குறைப்பு ...... குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் ????


SUBRAMANIAN P
பிப் 15, 2025 13:13

இருவது ரூவா எக்ஸ்ட்ரா


visu
பிப் 15, 2025 16:40

குப்பனுக்கும் சுப்பனுக்கும் அவன் இங்கிருந்து அமெரிக்கா க்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் வரி உயராமல் இருக்கும்


Sankar Ramu
பிப் 15, 2025 20:34

பாட்டிலுக்கு பத்து ரூபாய்...


S.Martin Manoj
பிப் 15, 2025 12:54

யாரோ தனக்கு சில அடி தூரத்துக்கு மார்பு இருக்குன்னு சொன்னாங்க


Kumar Kumzi
பிப் 15, 2025 15:58

அது சரி சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய பார்வட்ஸ்க்கு பாரீன் சரக்கு அடிக்க வக்கு எப்படி இருக்கும்


ஆரூர் ரங்
பிப் 15, 2025 12:53

25 லட்சம் ரூபாய்க்கு? இதனால் 40000 கோடி விற்றுமுதல் செய்யும் டாஸ்மாக் குக்கு பாதிப்பு ஏற்படு மா?


Haja Kuthubdeen
பிப் 15, 2025 14:25

2.5மில்லியன் டாலர் மதிப்பில்...இது ஒன்றும் பெரிய மதிப்புள்ளதும் இல்லை...பில்லியன் டாலர் கணக்கில் வர்த்தகம் நடக்கும் நாட்டில் இது கடுகு போன்றதே....இருந்தாலும் இந்த விஸ்கியெல்லாம் மேல்தட்டு மக்களுக்கானது...இதனால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லாத ஒன்று.


abdulrahim
பிப் 15, 2025 17:45

ஏண்டா கொமாரு நீ எதுக்கு பவுத்தத்தில் இருந்து மதம் மாறினாய் டா ????


venugopal s
பிப் 15, 2025 12:51

நம் நாட்டில் கிடைக்காத மக்களுக்கு மிகவும் அத்தியாவசியப் பொருளான இந்த அபூர்வமான விஸ்கி இறக்குமதி வரியைக் குறைத்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி!


அசோகன்
பிப் 15, 2025 12:35

ஐயோ.....அப்ப எங்க சாராய தொழிற்சாலைகளை இழுத்து மூடணுமா..... இது மோசமான ஒன்றிய ஆட்சி...... கவிதாயினி பெண் தெய்வம் இப்போதான் ஒரு சாராய கம்பெனிய வாங்குனாங்க அதுக்குள்ள ஆப்பா


Haja Kuthubdeen
பிப் 15, 2025 14:28

ஓவரான நகைச்சுவை...2.5மில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் அதுவும் மேல்தட்டு மக்கள் மட்டுமே உபயோகப்படுத்துவது...


Gnana Subramani
பிப் 15, 2025 12:33

கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும் 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர்பன் விஸ்கியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரிந்தால் மோடிஜியை என்ன செய்வாரோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை