உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறு விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடியில் மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம்

சிறு விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடியில் மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம்

புதுடில்லி: சிறு விவசாயிகளுக்கு, வங்கிகள் தயக்கமின்றி கடன் வழங்க வசதியாக 1,000 கோடி ரூபாயில் கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.டில்லியில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். இதன்படி, அறுவடைக்குப் பின் தானியங்களை இருப்பு வைத்ததற்கான கிடங்கின் மின்னணு ரசீதை வைத்துள்ள, சிறு மற்றும் குறு விவசாயிகள், அந்த ரசீதைக் காட்டினால், கடன் பெற அனுமதிக்கப்படுவர்.விவசாயக் கடன் திட்டங்களில் இத்திட்டம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும்; விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் காட்டும் தயக்கத்தை குறைக்கும் என்றும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.அறுவடை செய்யும் சிறு விவசாயிகள், தங்கள் விளைபொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காத சூழல் இருந்தாலும், அடுத்த போகம் பயிரிட வேண்டியிருப்பதால், நஷ்டத்தில் தங்கள் விளைபொருளை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இத்திட்டத்தின்கீழ், தங்கள் விளைபொருளை கிடங்குகளில் இருப்பு வைத்து, அதற்கான ரசீதைக் காட்டினால், அடுத்த போகம் பயிரிட, அவர்கள் கடன் பெற முடியும்.தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும்போது, கிடங்கில் உள்ள அவற்றை விற்பனை செய்து, நஷ்டத்தை தவிர்க்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது. கிடங்கு ரசீதை வங்கிகள் பிணையாகக் கருதி, விவசாயிகளுக்கு தயக்கமின்றி கடன் வழங்க, முன்வர இந்த திட்டம் உதவும். அதற்காக, வங்கிகளுக்கு 1,000 கோடி ரூபாய் நிதியில் இருந்து கடன் உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்கும்.

எப்படி கடன் பெறுவது?

1. விற்க முடியாத விளைபொருளை கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும்2. அதற்கான மின்னணு ரசீதை பெற வேண்டும்3. இந்த ரசீதை காட்டினால் வங்கி கடன் தரும்4. வங்கிகள் கிடங்கு ரசீதை பிணையாக ஏற்கும்5. வங்கிகளுக்கு கடன் உத்தரவாதத்தை அரசு வழங்கும்6. இதற்காக ரூ.1,000 கோடியை அரசு ஒதுக்குகிறது7. உரிய விலை கிடைக்கும் போது இருப்பை விற்று நஷ்டத்தை தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
டிச 18, 2024 10:22

வசூலாகாமல் விட்டால் வாராக்கடன் அக்கவுண்ட்டில் சேர்த்துட்டு பொதுமக்களிடம் வசூலிச்சிருவாங்க.


R.RAMACHANDRAN
டிச 18, 2024 08:30

ஏழை விவசாயிகள் விளைபொருட்களை விலை போகவில்லை என இருப்பு வைப்பதில்லை. பணக்காரர்கள் மட்டுமே இருப்பு வைத்து விற்கின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பெயரில் 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் லஞ்சம் கொடுத்து அத்திட்டத்தின் பயன் பெற வழிவகை செய்தது பணக்காரர்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து வருமானம் பார்க்க உடனடியாக 78 ஆயிரம் வரை மானியம் என திட்டத்தை செயல்படுத்துவது போல இத்திட்டமும் வசதி உள்ளவர்களுக்கானதே ஆகும்.


Kasimani Baskaran
டிச 18, 2024 05:36

லேபல் ஒட்டினால் கலைஞர் சிறுவிவசாயிகளின் நலத்திட்டம் என்றாகிவிடும்.


முக்கிய வீடியோ