உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆதரவுக்கு விழுந்த அடி: துருக்கி ஏர்லைன்ஸ் -இண்டிகோ ஒப்பந்த நீட்டிப்புக்கு மத்திய அரசு மறுப்பு

பாக்., ஆதரவுக்கு விழுந்த அடி: துருக்கி ஏர்லைன்ஸ் -இண்டிகோ ஒப்பந்த நீட்டிப்புக்கு மத்திய அரசு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்ததால், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனான விமான ஒப்பந்தத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறும் இண்டிகோ நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்தது. அந்நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக எல்லையில் உள்ள கிராமங்களை நோக்கி பாக். ராணுவம் நடத்திய பல தாக்குதல்களை இந்தியா முறியடித்தது. இந்தியா மீதான தாக்குதல்களின் போது பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ட்ரோன்களை வழங்கி துருக்கி உதவி செய்தது.துருக்கியின் பாக். ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்து, அந்நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு கடிவாளம் போடும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதன் முக்கிய கட்டமாக, துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளுமாறு இண்டிகோ நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இண்டிகோ நிறுவனம் 2 யோயிங் விமானங்களை குத்தகைக்கு பெற்று இயக்கி வருகிறது. இந்த விமானங்கள் புதுடில்லி, மும்பை நகரங்களில் இருந்து இஸ்தான்புல் நேரடி விமான சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், அவகாசத்தை நீட்டிக்குமாறு இண்டிகோ நிறுவனம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து, ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறது.இருப்பினும், பயணிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்கு மட்டுமே தற்காலிக நீட்டிப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு ஒன்றில் மூலம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
மே 31, 2025 12:37

இன்டிகோவின் பின்னணியில் வாத்ரா இருப்பதாக கூறுவர்?


KANNAPPA DHARMS
மே 31, 2025 10:09

Mindful decision, this is the best way of expression of disinterest by a nation to other nation which supports terrorism. The more a counrty sets back in trade the more it will suffer. Try considering all spices and food items exports be banned to Turkey.


அபுல்
மே 31, 2025 09:56

நாளைக்கி துருக்கி இஸ்தான்புல் போக ஃப்ளை ரெடியா இருக்கு ஹைன். நாம எல்லாரும் தாராளமா போய்வரலாம் ஹைன்.


வாய்மையே வெல்லும்
மே 31, 2025 11:03

இங்க உங்க ஆட்டம் செல்லாது ஹை . ஆதலால் அபுல் உங்களுக்கு பிரச்சனை ஹை நீங்க பாக்கிஸ்தான் செல்லலாம் ஹை .


எஸ்.சிங்காரம், சின்னசேலம்
மே 31, 2025 09:27

துருக்கி நான் இந்தியாவின் விரோதி என்று உலகம் முழுவதும் தம்பட்டம் அடிக்கிறது. அப்படிப்பட்ட நாட்டுக்கு விமானம் இயக்கி லாபம் சம்பாதிக்க வேண்டுமா இண்டிகோவுக்கு உரைக்கவில்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை