உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு; பும்ரா விலகல்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு; பும்ரா விலகல்

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகி உள்ளார்.பாகிஸ்தானில் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19-மார்ச் 9) நடக்க உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இதற்கு தகுதி பெறவில்லை.பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன. இதில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளை சந்திக்க உள்ளது.இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் தலைமையிலான இந்திய அணியில், வருண் சக்ரவர்த்தி, ராணா ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொடரில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகி உள்ளார்.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்)சுப்மன் கில் (துணை கேப்டன்)விராத் கோஹ்லிஷ்ரேயாஸ் அய்யர்கே.எல்.ராகுல்ரிஷப் பண்ட்ஹர்திக் பாண்ட்யாஅக்ஷர் படேல்வாஷிங்டன் சுந்தர்குல்தீப் யாதவ்ஹர்சித் ராணாமுகமது ஷமிஅர்ஷ்தீப் சிங்ரவீந்திர ஜடேஜாவருண் சக்கரவர்த்திபயணம் செய்யாத மாற்று வீரர்களாக, ஜெய்ஸ்வால், சிராஜ் மற்றும் ஷிவம் துபே ஆகிய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Adhi Ayyappan
பிப் 12, 2025 22:33

விராட் கோலி.? உள்ளார் என்று நினைக்கிறேன்.


Anantha raj
பிப் 12, 2025 16:48

சூப்பர்


R.Natatarajan
பிப் 12, 2025 14:01

As long as Tendulkar and Agarkar bombay lobby Gill Made ad vice captain. But he will not shine in foreign soil


Ramesh Sargam
பிப் 12, 2025 12:10

ரோஹித், கோலி இருவரும் கிரிக்கெட் ஆடுவதை மறந்து பலநாட்கள் ஆகிவிட்டது. இருவரும் total flop. பிறகு எதற்கு அணியில்...?


Yasararafath
பிப் 12, 2025 11:39

பும்ரா விலகியது நல்லது இல்லை


R Partha Sarathi
பிப் 12, 2025 10:55

IPL வருது அதுக்கு ஓய்வு கண்டிப்பாக வேணும்....ஜெய் அம்பானி...ஜெய் ஷா.


Kowsik Prabhu (KowsiKRainA)
பிப் 12, 2025 12:01

மேட்ச் பாக்குற பழக்கம் இல்ல போல


R Partha Sarathi
பிப் 12, 2025 14:24

ஆமா....கருண் நாயர் ஏன் எடுக்கல னு கட்டி அதுக்கு பதில் இல்லை...இவனுக விளையாடுறத விமர்சிக்க சச்சினா இருக்கனும் அவசியம் இல்லை....சகோதர கௌசிக் ரைனா அவர்களே...


R Partha Sarathi
பிப் 12, 2025 10:54

ஆமா.... வருது அதுக்கு ஓய்வு வேணும்...கடவுளுக்கு நன்றி... உருப்புடும்....


M. PALANIAPPAN
பிப் 12, 2025 10:11

பும்ரா இல்லாதது இந்தியன் டீமுக்கு ஒரு பெரிய குறைதான், மற்ற பாஸ்ட் பௌலர்ஸ் நல்ல முறையில் விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்


Venkat Narayanan
பிப் 12, 2025 08:11

Siraj should have been a part of the team, also Ishan kishan in place of KL


Minimole P C
பிப் 12, 2025 07:30

Really it is a setback for the team without Bumrah. A master blower his contribution to the team has no match. Rana is a lucky bowler not a effective bowler. Now fast bowling attack mostly depends on Sami, who is yet to come to his grooves. Anyhow let us wish team India good luck unlike last WC.


சமீபத்திய செய்தி