புதுடில்லி: தமிழகத்தில் இன்று (ஜூன்23) ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது போல் கேரளா, கர்நாடகாவில் அதி கன மழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டடுள்ளது.வட மாநிலங்களான மேற்குவங்கம், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, அந்தமான், உள்ளிட்ட மாநிலங்களிலும் வரும் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. உ.பி.,யின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=95tzbsyj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஜூன் 23) கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 129% கூடுதலாக பெய்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று முதல் ஜூன் 25ம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.