உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மல்யுத்த களமாக மாறிய சண்டிகர் மாநகராட்சி: கவுன்சிலர்கள் கைகலப்பு

மல்யுத்த களமாக மாறிய சண்டிகர் மாநகராட்சி: கவுன்சிலர்கள் கைகலப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராஜ்யசபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அதில், அமித்ஷா பதவி விலக வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., கவுன்சிலர்கள், நேரு ஆட்சியில் அம்பேத்கர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி, கடைசியில் கைக்கலப்பில் ஈடுபட்டனர். இது சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.அப்போது, மாநகராட்சியில் இருந்த நியமன கவுன்சிலரான அனில் மசியாவை, ஓட்டு திருடன் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் குற்றம்சாட்ட, அதற்கு, ராகுல் ஜாமினில் வெளியே வந்தவர் என அவர் பதிலடி கொடுத்தார். இதுவும் மோதலை மேலும் தூண்டிவிட்டது. இதனையடுத்து மற்ற கவுன்சிலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rpalni
டிச 25, 2024 10:54

படேலை விட காந்திக்கு நேருமேல அப்படியென்ன கரிசனம்? .


M Ramachandran
டிச 24, 2024 17:56

அன்கேயும் திராவிடமாடலா


duruvasar
டிச 24, 2024 17:08

ராகுல் போட்ட பிள்ளையார்ச்சுழி நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இனி ஒரே கொண்டாட்டம்தான் போங்க


HoneyBee
டிச 24, 2024 17:01

நாட்டின் மாண்பை கெடுக்கும் வகையில் இந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் புத்தி போய்விட்டது. உண்மையை மறைத்து வெளி வேஷம் போட்டு நாட்டை குட்டிச் சுவறாக்க தான் இப்படி


sundarsvpr
டிச 24, 2024 16:02

பள்ளியில் மாணவர்களுக்கு ராணுவத்தில் சிப்பாய்களுக்கு வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் பணிபுரிபவர்கள் பக்தர்கள் எல்லோருக்கும் நடத்தை விதிமுறைகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆனால் கடைபிடிக்கமாட்டார்கள்.


அப்பாவி
டிச 24, 2024 15:23

தோண்டுங்கடா... பட்டி தொட்டியெல்லாம் செத்துப் போனவங்களை எடுத்து வெச்சு அரசியல் பண்ணுங்க. நாடு வெளங்கிடும்.


RAMAKRISHNAN NATESAN
டிச 24, 2024 15:14

இந்த செய்தி பல தமிழக ஊடகங்களால் மறைக்கப்படுகிறது .... கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில், பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர், பலாத்காரம் செய்யப்படுவதை எதிர்த்துப் போராடியதற்கான ஆதாரம் சம்பவ இடத்தில் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய வீடியோ