உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைபர் நெட் திட்ட முறைகேடு வழக்கு முதல் குற்றவாளியாக சந்திரபாபு சேர்ப்பு

பைபர் நெட் திட்ட முறைகேடு வழக்கு முதல் குற்றவாளியாக சந்திரபாபு சேர்ப்பு

அமராவதி :ஆந்திராவில், 'பைபர் நெட்' திட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, 73, முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளது.ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

ஜாமின்

இங்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு வாரியத்தில், 371 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவை கடந்த ஆண்டு செப்., 9ல் போலீசார் அதிரடியாக கைது செய்து, ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு இவ்வழக்கில் கடந்த ஆண்டு நவ., 20ம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.இந்த உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு மீது, பைபர் நெட் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை அம்மாநில அரசு சுமத்தியுள்ளது.

புலனாய்வு பிரிவு

இதுதொடர்பாக, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை நேற்று முன்தினம் அம்மாநில குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சந்திரபாபு நாயுடுவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இக்குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதாவது:ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, எரிசக்தி, உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் துறையை கவனித்து வந்தார். அப்போது, 2015ல் பைபர் நெட் திட்டத்தை செயல்படுத்த, அவர் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்தார். 330 கோடி ரூபாய் மதிப்புடைய பைபர்நெட் முதற்கட்ட திட்டத்தின் பணியை தனக்கு சாதகமான நிறுவனத்துக்கு 'டெண்டர்' ஒதுக்கீடு செய்தது முதல், முழு திட்டமும் நிறைவடைந்தது வரை பல முறைகேடுகள் அரங்கேறின. இதன் விளைவாக மாநில அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 18, 2024 08:05

வெளிநாடுகளில் குற்றம் செய்தவர்கள் முன்னாள்/இந்நாள் பிரதமராக இருந்தாலும், அதிபராக இருந்தால் சட்டத்தால் தண்டனை பெறுவார்கள். இங்கு நம் நாட்டில் ஒரு ஏரியா கவுன்சிலரை தண்டிக்கமுடியாத அளவுக்கு சட்டத்தில் ஓட்டைகள். வெட்கம். வேதனை.


மேலும் செய்திகள்