உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்திரபாபு சொல்வது பொய்; தலையிடுங்க பிரதமரே: ஜெகன்மோகன் கடிதம்

சந்திரபாபு சொல்வது பொய்; தலையிடுங்க பிரதமரே: ஜெகன்மோகன் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: '' திருப்பதி லட்டு விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு சொல்வது பொய். அவரின் குற்றச்சாட்டால் புண்பட்டுள்ள பக்தர்களின் மனதை நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும்,'' என ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மை, மரியாதையை முதல்வர் சந்திரபாபு நாயுடு கெடுத்த விவகாரத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடவுள் வெங்கடேஸ்வராவுக்கு இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3sax3iws&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சந்திரபாபு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் முடிவு பெற்ற நிலையில், அரசின் செயல்பாடுகளில் மக்களுக்கு திருப்தியில்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அனைத்து முனைகளிலும் புதிய அரசு தோல்வி அடைந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என அஞ்சி, இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கூட மாநில அரசு இன்னும் தாக்கல் செய்யவில்லை.திருப்பதி தேவஸ்தானம் நடைமுறை குறித்து சந்திரபாபு பொய் பரப்பி வருகிறார். அங்கு லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக பொய் கூறுகிறார். உலகளவில் ஹிந்து பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அரசியல் நோக்கத்திற்காக பரப்பப்படும் பொய் பிரசாரம் ஆகும். புண்பட்டுள்ள பக்தர்களின் மனதை நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும்.தனது குற்றச்சாட்டு பொய் என்பது அவருக்கு தெரியும். இருப்பினும், ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்று தெரிந்தும் அதனை சொல்லி வருகிறார். திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சுதந்திரமான அமைப்பு. மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பரிந்துரைப்படி உண்மையான பக்தர்கள் மட்டுமே இந்த அமைப்பு நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போாது பா.ஜ.,வுக்கு தொடர்புடையவர்களும் தேவஸ்தானத்தில் உள்ளனர். இக்கோயிலில் மாநில அரசின் பங்கு மிகக்குறைவு.அரசியல் காரணங்களுக்காக சந்திரபாபு தெரிந்தே பொய் சொல்லி வருகிறார். அரசியல் நோக்கங்களுக்காக, எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கி பொய் சொல்வது சந்திரபாபுவுக்கு வழக்கம். இந்த விவகாரத்தில் அவரை கடுமையாக கண்டிப்பதுடன், அதில் உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kumarkv
செப் 28, 2024 13:47

அடுத்து என்ன, ஸ்லெட்டு காணும், பல்பம் காணும்


Rajasekar Jayaraman
செப் 23, 2024 06:47

தண்டனை அடைந்தே ஆக வேண்டும் மத நம்பிக்கையை குலைத்த கொள்ளையன் ஜெகன்மோகன் கூட்டத்தை தண்டிக்க வேண்டும் விடக்கூடாது.


Ganapathy
செப் 22, 2024 22:38

திருப்பதி தேவஸ்தான ஆபீசுல கிறிஸ்தவ ஆபீசர்களை நீ ஏன் நியமித்தாய்? இதனால ஹிந்துக்ள் மனம் புண்படவில்லையா?


அப்பாவி
செப் 22, 2024 22:27

கூட்டுக்களவாணிகள்


Ramesh Sargam
செப் 22, 2024 20:37

யார் சொல்வது பொய், யார் சொல்வது மெய் ... எதுவுமே புரியவில்லையே வெங்கட்ரமனா...


சிவம்
செப் 22, 2024 20:05

வழக்கை எதிர் கொள்ள தயாரா? அந்த நெய்யை உற்பத்தி செய்தது முதல் திருமலா சென்றடையும் வரை இதில் சம்பந்தபட்ட அனைவரும் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள். அது குஜராத்திகளாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் சரி, நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அப்ரூவராக மாற தயாரா?


Bala
செப் 22, 2024 20:01

திருட்டு திராவிடிய தெலுங்கன்களின் மாதிரி- மடல் எழுதுதல்?


venugopal s
செப் 22, 2024 19:50

ஏவப்பட்ட அம்பு மீது வில்லிடமே போய் புகார் கொடுத்தால் என்ன நியாயம் கிடைக்கும்?


M Ramachandran
செப் 22, 2024 19:28

செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வில்லை. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் எப்படி ஒரு ஹிந்து ஆல்லாதவனை உட்கார வைத்தாய். அங்கே ஆரம்பித்தது இந்த சந்தேகம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையு. பாரத தேசம் பழமையானது.இங்கு ஆண்டு கொண்டிருந்தவர்கள் ஹிந்துக்கள். வந்தேறிகள் நய வஞ்சகத்தால் அடிமை படுத்தி ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஆட்சி செய்த லட்சணம் உடன் பிறந்தவர்களை கொன்று குவித்து அரசு கட்டிலில் உட்கார்ந்த கும்பல்.


D.Ambujavalli
செப் 22, 2024 18:43

இனி இவர் எவ்வளவுதான் கத்தி கூப்பாடு போட்டாலும், ஒரு முறை மக்கள் மனம் என்ற பால் தெளிந்துவிட்டால் மாற்றுவது கடினம். பிரதமருக்கு சந்திரபாபு, ஆதாரத்துடன் நிரூபித்த பின். என்ன எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று இவர் எதிர்பார்க்கிறார் இனி பக்தர்கள் லட்டைப் பார்க்கும் போது நெய் மணமும், முந்திரி பாதாமும் தெரியாது .இதை மாற்றுவது எளிதல்ல


சமீபத்திய செய்தி