உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.500 நோட்டுகளுக்காக மீண்டும் பண மதிப்பிழப்பு தேவை: மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

ரூ.500 நோட்டுகளுக்காக மீண்டும் பண மதிப்பிழப்பு தேவை: மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடப்பா: ரூ,500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆந்திராவின் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மகாநாடு தொடங்கியது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: டிஜிட்டல் கரன்சி குறித்த அறிக்கையை பிரதமரிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தேன். அதில் ரூ.500, ரூ.1000, ரூ.2000 ஆகிய நோட்டுகளை ஒழிக்குமாறு கேட்டுக் கொண்டேன். டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினால் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளுக்கும் பலன் அளிக்கும். புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை நீக்குவது பல நன்மைகளை தரும். ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும். இந்த மாநாட்டில் இதை வலியுறுத்துகிறேன். தெலுங்கு தேசம் எப்போதும் தூய்மை அரசியலைத்தான் விரும்புகிறது. கறுப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை. இன்று ஆந்திரா என்ன நினைக்கிறதோ அதையே தான் நாளை இந்தியா நினைக்கிறது. தேர்தலில் ஓட்டுகளுக்காக மக்களுக்கு பணம் தர வேண்டியது இல்லை. மக்களுக்கு நல்லது செய்தால் ஓட்டுகள் தானாகவே கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

நிவேதா
மே 28, 2025 10:54

பண மதிப்பிழப்பு நடந்ததால் நாடு செழித்து விட்டது என சிலர் பேசலாம். மக்கள் கஷ்டப்பட்டனர் என சிலர் பேசலாம். ஆனால் RBI கணக்கு படி almost all பழைய நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுவிட்டன. RBI யும் இவ்வளவு அளவு மக்களிடம் அறியாமல் பெறப்பட்ட கள்ள நோட்டுக்கள் இருந்தன என தெரிவிக்க வில்லை. அப்படியென்றால் எங்கே புழக்கத்தில் விடப்பட்டதாக சொல்லப்படும் பாகிஸ்தானில் அடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள் ?


Ramamurthy Srinivasan
மே 28, 2025 10:00

அஸ்கு புஸ்கு அது எப்படி முடியும்.


jambukalyan
மே 28, 2025 08:33

நான் திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் கருத்துக்களை ஆதரிக்கிறேன். 200/500 இரண்டுமே புழக்கத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும். அவைகளில் நிறைய கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. மேலும், பணத்தை பதுக்கி வைத்தல் குறையும். பணவீக்கம்/கறுப்புப் பணம் குறையும். நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது.


Kasimani Baskaran
மே 28, 2025 04:07

அடுத்த தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே செல்லாமல் போன 500, 1000 நோட்டுக்களை ஏற்றுக்கொள்வோம் என்று சொல்வது சாத்தியமே...


நசி
மே 27, 2025 22:01

சந்திரபாபு நல்லா சொத்து சேர்த்துட்டாரு அதுஅவர் புத்திசாலிதனம் மனசாட்சி உள்ள சேவை மனப்பான்மை உள்ள அரசியல்வாதிகள் அவர்கள் அரசியலுக்கு முன் உள்ள சொத்து தவிர மற்ற அனைத்தையும் நாட்டுடமையாக்க சட்டம் வேண்டும் தேர்தல் இரண்டு டேர்ம் மேல் இருக்கூடாது செலவு அனைத்தையும் அரசே ஏற்றால் கறுப்பு பணம் குறையும் இதை மோடி ராகுல் செய்வார்களா


நிவேதா
மே 27, 2025 21:54

First of all, if the Govt is really interested in Digital era, the Govt must stop collecting additional ges on credit card payments. Also, service ges by banks while making debit card or netbanking payments while booking train tickets to be stopped. The service ges for cash deposits in CDMs is also wrong. Also, it is funny that checking balance in ATM is also treated as a transaction as it hurts the person who uses the ATM more than specified transactions prescribed within a month. Before elections, the Govt announced that the Banks will not collect any penalty towards non maintenance of minimum balance. Now, after elections, the same story started hitting the lower class citizen again. Now a days, several find harassment by banks in the name of KYC as it has been asked repeatedly. By asking the PAN and Aadhar repeatedly even by knowing these numbers wont change, the banks get pleasure.


ems
மே 27, 2025 21:45

UPI போன்ற டிஜிடல் பரிவர்த்தனை விதிகள் மாற்றம் குறித்து அறியாத நபரா?... கல்வி மற்றும் மருத்துவமனை போன்ற செலவுகளுக்கு 5 லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யலாம்...


சேகர்
மே 27, 2025 23:02

அந்த வங்கி கணக்கு மருத்துவமனை பேரில் இருந்தால் மட்டுமே 5 லட்சம்.தனியார் பெயரில் இருந்தால் 2 லட்சமே.


K.n. Dhasarathan
மே 27, 2025 21:24

நாயுடு மிக அபத்தமாக பேசுகிறார், முன்பு இதே பண மதிப்பிழப்பு கொண்டு வந்து கருப்பு பணத்தை பிடிப்போம் /ஒழிப்போம் என்றார்கள், எவ்வளவு கருப்பு பணத்தை பிடித்தார்கள் ? இதுவரை சொல்லவில்லை. ஆனால் 143 பேர் உயிர் இழந்ததை திருப்பி தருவீர்களா ? மீண்டும் கொண்டுவந்து இன்னும் எத்தனை பேரை சாகடிக்க ? அதேநேரம் அருண் ஜெட்லீ தன மகளுக்கு 80 லட்சம் செலவில் கல்யாணம் செய்தார், சேகர் ரெட்டி வீட்டில் பல லட்சம் கோடிகள் புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன, ஆனால் பொது மக்கள் 2000 ரூபாய்க்குமேல் எடுக்க முடியாது, என்னய்யா சட்டம் ? யாருக்கு இந்த சட்டம்?


நாஞ்சில் நாடோடி
மே 28, 2025 14:02

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் வீழ்ந்தது. காஸ்மீரில் கல்லெறிதல் முடிவுக்கு வந்தது...


Siva Subramaniam
மே 27, 2025 21:22

Need of the hour is PLASTIC currency notes. Forests are already disappearing due to use for paper making etc Highest denomination should be 100 only. All transactions above rupees 500 be by electronic tem.


நிவேதா
மே 27, 2025 21:08

ஆந்திராவில் வயதான பெண்களின் பென்ஷன் பணம் பேங்க் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. பண பட்டுவாடவே செய்யப்படுகிறது. சந்திரபாபு நாயுடு எதற்காக டிஜிட்டல்க்கு மாறவில்லை இந்த விஷயத்தில். ஊழல்வாதிகள் 500 ரூபாய் கட்டுகளாக வீட்டில் அடுக்கி வைப்பதில்லை. கிரிப்டோ கரன்சி மற்றும் ஹவாலா வழிமுறைகள் மூலம் அவர்களால் ஊழல் செய்யமுடியும். ஆனால் சாதாரணமானவர்கள் நிலை அப்படி அல்ல. எல்லா குடிமகனும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதில்லை. வைத்து கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதில்லை. ஒரு ஆஸ்பத்திரியில் அவசரப்பிரிவு அனுமதிக்கு லட்ச கணக்கில் செலுத்த வேண்டி இருந்தால் UPI மூலம் 1 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்யமுடியாது. ATM இல் 40000 ரூபாய்க்கு மேல் எடுக்கமுடியாது. 100 ரூபாய் , 50 ரூபாய் கட்டுகளை செலுத்துவது நேரம் வீணாகும். மேலும் பிக்பாக்கெட் காரர்களுக்கு கொண்டாட்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை