உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்டு விவகாரத்தில் நாயுடு செய்த பாவம்: பரிகாரம் செய்ய போகிறாராம் ஜெகன்

லட்டு விவகாரத்தில் நாயுடு செய்த பாவம்: பரிகாரம் செய்ய போகிறாராம் ஜெகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: திருப்பதி லட்டு பிரசாத விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை துடைக்க அனைத்து கோயில்களிலும் வரும் 28-ம் தேதி நடைபெறும் பரிகார பூஜையில் ஆந்திர மக்கள் கலந்து கொள்ளுமாறு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கடந்த 18-ம தேதியன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் முதல்வர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக ‛ எக்ஸ்' வலைதளத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பதிவேற்றியுள்ளதாவது, அரசியல் உள்நோக்கத்துடன், என் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக பொய்யான தகவலை கூறியதன் மூலம் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை துடைக்க வேண்டும். அதற்காக மாநிலம் முழுதும் உள்ள கோயில்களில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள பூஜைகள் செய்து பரிகாரம் செய்ய வேண்டும். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் பதிவேற்றியுள்ளார்.முன்னதாக பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி எழுதியுள்ள கடித விவரம், லட்டு பிரசாதம் தயாரிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் பின்பற்ற வரும் நடைமுறையில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. அரசியல் காரணத்திற்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகளை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார். இதன் மூலம் முதல்வருக்கு உள்ள அந்தஸ்தை மட்டுமல்ல, அதற்கும் கீழாக தரம் தாழ்ந்து போய்விட்டார். முதல்வரின் செயல் வெட்கக்கேடானது. இதில் உண்மையை தாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.இதனிடையே வரும் 28-ம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்று ஜெகன் தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

DARMHAR/ D.M.Reddy
செப் 26, 2024 02:31

சந்திர பாபுவுக்கு விநாச காலே விபரீத புத்தி . வஞ்சனை சொல்வாரையும் செய்வாரையும் வாட்டாமல் விடமாட்டான் திருவேங்கடத்தான் என்பது இந்த சந்திர பாபுவுக்கு ஏனோ மண்டையில் உதிக்கவில்லை ?


கல்யாணராமன்
செப் 25, 2024 22:40

நீங்கள் பரிகாரம் செய்ததற்கு நாங்கள் பரிகாரம் செய்துவிட்டோம்.


ஆரூர் ரங்
செப் 25, 2024 21:45

பாதிரிமார்களை ஒருசேர நிற்க வைத்து ஹோல்சேல் பாவமன்னிப்பு கேட்டுடுங்க.


Dharmavaan
செப் 25, 2024 21:44

இவரை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது இன்னும் பாவம் சேரும்.


SenthilKumar S
செப் 25, 2024 21:42

லட்டுவில் கலப்படம் உண்மையா என்று தெரியவில்லை. திருப்பதி பக்தர்கள் நம்பிக்கையில் கை வைக்க முயற்சி செய்திருக்கிறார் ஆந்திர முதல்வர். இரண்டு பக்கத்தினரும் பரிகார பூஜை செய்கிறார்கள். திருப்பதி வெங்கடாஜலபதி அனைத்தையும் ஏற்றுக் கொள்வாராக. பிரச்சனை உருவாக்கிய அரசியல்வாதிகளுக்கும் பக்தியோடு பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கும் வெங்கடாஜலபதி என்ன பதில் கூறப் போகிறார் பார்ப்போம். இனி சாப்பிடும் பிரசாதங்களிலும் அன்னதானங்களிலும் கலப்படம் இல்லாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.


ஸ்ரீ
செப் 25, 2024 21:27

சில மாதங்களுக்கு முன் முதல்வராக இருந்த போது கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது புனித கலச நீருக்கு பதில் bisleri waterரை கலசத்தில் விட்டு வாங்கிய பிரகஸ்பதி இவன்.


Arun ji
செப் 25, 2024 21:24

எல்லோரும் சர்ச்சுக்கு வந்துருங்கோ....


அரவிந்த்
செப் 25, 2024 20:53

ஜெய் ஜெகன் அண்ணா


Rasheel
செப் 25, 2024 20:44

உலகம் முழுவதும் செய்யாத பாவ மன்னிப்பா ஒருவர் ரத்தத்திற்காக பல லக்ஷம் பேர் ரத்தத்தை பாவ மன்னிப்பாக செய்தவர்கள். இதுதான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடிகளின் வரலாறு சொல்கிறது.


Velan Iyengaar
செப் 25, 2024 20:21

ஆந்திர ஹிந்துக்களின் ஏகபோக குத்தகை உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சி கையை விட்டு போச்சுதா ???? இதுபோன்ற ரெண்டு பக்க இடியை அரசியல் சாணக்கியர் எதிர்பார்த்திருக்கமாட்டார் .... ஒரு பக்கம் கேட் போட்டுட்டாங்களா இன்னொரு பக்கம் எப்போவெனாலும் கேட் போடுவாங்க ஹி ஹி ... இந்த அரசியல் விளையாட்டு ரொம்போ நல்லா இருக்கு


theruvasagan
செப் 25, 2024 22:20

ஓஹோ. இன்னிக்கு 200 ஓவாவோட சரக்கு கோட்டா டபுளா. ஒரே உளறலா இருக்கு.


Duruvesan
செப் 25, 2024 22:31

என்ன பர்மா பஜார் மூர்க்ஸ் கதறல் பலமா இருக்கு


சமீபத்திய செய்தி