உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில தேர்தல்களில் வியூகம் மாறும்: காங்கிரஸ் திட்டம்

மாநில தேர்தல்களில் வியூகம் மாறும்: காங்கிரஸ் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலை போன்று, ஒரே பார்முலாவாக இல்லாமல் இண்டியா கூட்டணி, மாநில சட்டசபை தேர்தல்களில் வெவ்வேறு விதமான வியூகத்தை பின்பற்றும்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து, பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு, ஜெயராம் ரமேஷ் அளித்த பேட்டி: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது. டில்லியிலும் சட்டசபை தேர்தலில், எங்களுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சியே கூறியிருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pttqy4jc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபா தேர்தலை போன்று, ஒரே பார்முலாவாக இல்லாமல் இண்டியா கூட்டணி, மாநில சட்டசபை தேர்தல்களில் வெவ்வேறு விதமான வியூகத்தை பின்பற்றும். எங்கள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரும்பும், மாநிலங்களில் கூட்டணியாக சட்டசபை தேர்தலை சந்திப்போம்.மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் (சரத்சந்திர பவார்) இணைந்து போட்டியிடுவோம். ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உடன் கூட்டணியில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

theruvasagan
ஜூலை 05, 2024 09:11

வியூகம் என்ன மண்ணாங்கட்டி வியூகம். லோக்சபா தேர்லில் புருடாவிட்டு குருட்டாம்போக்கில் பெற்ற அதிக சீட்டுகளை காரணமாகக் காட்டி அதிக சீட்டுகளைப் பெற்று கூட்டணி கட்சிகள் முதுகில் சவாரி செய்யலாம் என்கிற பேராசைதான். அதுதான் கான்கிராஸ் தந்திரம். ஆனால் இந்த தடவை அடவாடி செய்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும். வடக்கு மாநிலங்களில் கான்கிராஸ் பவுஷு என்ன என்பது கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றாக தெரியும்.


கண்ணன்
ஜூலை 05, 2024 06:40

என்ன பெரிய வியூகம், பொய்களை அள்ளிவிட வேண்டியதுதான்!


R KUMAR
ஜூலை 04, 2024 21:21

வெவ்வேறு மாநில கட்சிகளிடம் பிச்சை. கேட்பதை சற்று நாசூக்காக கூறுகிறார். மொத்தத்தில், பஜனை செய்ய வேறு மடங்களை பார்க்கப்போகிறார்கள், அவ்வளவுதான். எப்படி இருந்தாலும், சவாரி செய்ய ஒரு முதுகு வேண்டும், சொந்த காலில் நிற்க தகுதி இல்லை


Pandiarajan Thangaraj
ஜூலை 04, 2024 20:03

ஆண்டுக்கு ஒரு லட்சம் என்பதற்கு பதிலாக மாதம் ஒரு லட்சம் என்று வாக்குறுதி அளித்தால் வெற்றி நிச்சயம்


gopalakrishna kadni
ஜூலை 04, 2024 19:59

எப்படி, கேரளாவில முட்டிப் போம். வெளியில ஒட்டிப் போம். அப்படித்தானே. ரொம்ப நல்லா இருக்கு


பேசும் தமிழன்
ஜூலை 04, 2024 19:26

இவர் எங்கள் கூட்டாளி..... ஆனால் பகைவன்.... என்னடா மக்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்து விட்டீர்களா ???


Swaminathan L
ஜூலை 04, 2024 18:03

ஆர்ஜேடி மற்றும் மஹாராஷ்டிராவில் எம்விஏ, ஜேஎம்எம் தவிர்த்து வேறெங்கும் வேறெந்த மாநிலக் கட்சியும் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தரும் அளவுக்கு கூட்டணி வைக்கப் போவதில்லை. இதில் என்ன வியூகம் வகுத்து, என்ன அரசியல் லாபம் அடைய முடியுமோ?


Swaminathan L
ஜூலை 04, 2024 18:03

ஆர்ஜேடி மற்றும் மஹாராஷ்டிராவில் எம்விஏ, ஜேஎம்எம் தவிர்த்து வேறெங்கும் வேறெந்த மாநிலக் கட்சியும் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தரும் அளவுக்கு கூட்டணி வைக்கப் போவதில்லை.


K.Muthuraj
ஜூலை 04, 2024 17:40

சிதம்பரம், கபில் சிபிலுக்கு மிகவும் மட்டமான கொள்ளை


ஸ்ரீ
ஜூலை 04, 2024 17:37

மாநில கட்சிகளிடம் தொகுதி கேட்டதுதான் வியூகம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ