உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சில மணி நேரத்தில் இனி செக் பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை

சில மணி நேரத்தில் இனி செக் பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை

மும்பை: வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, வரும் அக்., 4ம் தேதி அமலுக்கு வருவதாக ஆர்.பி.ஐ., அறிவித்துள்ளது. இதனால், தற்போது காசோலை பரிவர்த்தனைக்கு, இரண்டு நாட்கள் வரை ஆகும் நிலையில், இனி, மின்னணு பணப்பரிமாற்றம் போலவே, சில மணி நேரத்தில் பணம் வரவு வைக்கப்படும்.

இது குறித்து ஆர்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தற்போது சி.டி.எஸ் எனப்படும் காசோலைக்கு ஒப்புதல் அளிக்கும் முறையில், பேட்ஜ் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இனி, அவை தொடர்ச்சியான, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்துவதுடன், தேவையற்ற தாமதத்தை குறைத்து, வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக புதிய நடைமுறை, வரும் அக்., 4ம் தேதி மற்றும் 2026 ஜன., 3ம் தேதி என இரண்டு கட்டமாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

அந்த நான்கு மணி நேரம்

உதாரணமாக, காலை 10 மணி முதல் 11 மணி வரை பெறப்படும் காசோலையை, பிற்பகல் 2 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யப்படாவிட்டால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தன்னிச்சையாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணம் வரவு வைக்கப்படும். பரிவர்த்தனை முடிந்த பின்னர், காசோலை பெற்று கொண்ட வங்கி, வாடிக்கையாளர் கணக்கில், ஒரு மணிநேரத்திற்குள் பணத்தை வரவு வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Srinivasan
ஆக 15, 2025 14:04

நீங்கள் எல்லாம் இனியும் செக் உபயோகம் செய்வது நகைச்சுவை. பணம் மாற்ற பல வழிகள் உள்ளது தேவை இல்லாமல் செக் உபயோகம் பிறகு வங்கிகளின் மேலே பழி போடுதல்


vns
ஆக 15, 2025 08:52

இதுதான் முன்னேற்றம். மோடி வாழ்க.


Jack
ஆக 15, 2025 08:02

ஒரே வங்கிக்கான DD காலை 10 மணிக்கு கொடுத்தும் மாலை ஏழுமணிக்கு தான் வரவு வைத்தார்கள் ..ஒரு மணிக்கு கேட்டபோது கையெழுத்து சரிபார்க்க நேரம் ஆகும் என்று கதை சொன்னார்கள் ..


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 15, 2025 10:39

நீங்க அதிர்ஷ்டக்காரர் சார். நான் ஐ சி ஐ சி ஐ வங்கி செக் ஒன்றை இந்தியன் வங்கிக்கு கொடுத்தேன். மூன்று நாட்கள் சென்ற பின் கையெழுத்து சரியில்லை என்று திருப்பி விட்டார்கள். இந்தியன் வங்கி கணக்கில் செல்லாத செக் என்று முன்னூறு ருபாய் பிடித்தம் செய்துவிட்டார்கள். ஐ சி ஐ சி ஐ வங்கிக்கு சென்று கேட்டதில் கணினியை திறந்து 1995 ஜனவரியில் நான் கணக்கு துவங்கிய நாளில் போட்டுக்கொடுத்திருந்த கைஎழுத்தைக்காட்டி மாற்றம் இருக்கிறது என்று சொன்னார்கள். என்னால் முடிந்ததெல்லாம் சத்தம் போட்டுவிட்டு சென்ற வாரம் சென்று அக்கவுன்ட் க்ளோஸ் செய்தேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை