உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை கார் பந்தய வழக்கு ஐகோர்ட் உத்தரவுக்கு தடை

சென்னை கார் பந்தய வழக்கு ஐகோர்ட் உத்தரவுக்கு தடை

'சென்னையில் நடந்த, 'பார்முலா - 4' கார் பந்தயத்திற்கு தனியார் நிறுவனம் பணம் தர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.சென்னையில், மூன்று ஆண்டுகளுக்கு பார்முலா - 4 கார் பந்தயம் நடத்துவதற்காக தனியார் அமைப்புடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தம் போட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்., 1ல் இந்த கார் பந்தயங்கள் சென்னையின் மையப்பகுதியான அண்ணா சாலையில் நடந்தது. இதற்கிடையே, கார் பந்தயத்திற்காக தமிழக அரசு செய்துள்ள, 42 கோடி ரூபாய் செலவை, அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள, 'ரேசிங் பிரமோஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட சில உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதை எதிர்த்து, அந்த தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், 'சென்னையில் நடந்த கார் பந்தயத்துக்கு தமிழக அரசு செலவு செய்த தொகையை தனியார் நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Raghavan
பிப் 21, 2025 13:39

இங்கே உள்ள நீதிபதியும் அங்கே உள்ள நீதிபதியும் படித்தது என்னமோ இந்தியன் பீனல் கோடு. அது எப்படி ஒரு நீதிபதி ஒருவிதமாகவும் இன்னொரு நீதிபதி வேறுவிதமாகவும் தீர்ப்பு சொல்லுகிறார்கள். இதெல்லாம் பார்த்தால் காசு மணி துட்டு செய்யும் வேலை போல் தெரிகிறது.


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 12:11

தமிழகம் என்றாலே சுப்ரீம் கோர்ட்டுக்கு நடுக்கம் தண்டனை பெற்ற அமைச்சர்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு ஆனால் பொது மக்களுக்கு உடனடி தண்டனை.


ram
பிப் 21, 2025 10:39

கேவலம் இந்த தீர்ப்பு


P.Sekaran
பிப் 21, 2025 10:05

பணம் பாதாளம் வரை பாயும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் எல்லாம் அந்த இறைவனுக்கு தெரியும். என்று சமாதானம் செய்ய வேண்டியதுதான். அதே நிலைமைதான் தமிழ்நாட்டின் நிலைமையும். நித்தியமும் ஒரு கொடுமையான நிகழ்ச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது.


Dharmavaan
பிப் 21, 2025 10:01

நாட்டை குட்டிச்சுவராக்குவதே உச்ச நீதிதான் கேவலம்


Barakat Ali
பிப் 21, 2025 09:57

சென்னை மன்றம், கழகத்தின் கிளை மன்றமா ???? அல்லது கட்டப்பஞ்சாயத்து மன்றமா ????


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 09:41

....மன்றம்


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 09:39

காதலியிடம் கேட்டு வாங்கவும்.


GMM
பிப் 21, 2025 08:25

தனியார் நிறுவனம் செலவை திரும்பி தரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு இருந்தால், நிறுவனம் விலகி இருக்கலாம்.


Iniyan
பிப் 21, 2025 07:03

உச்ச நீதி மன்றம் தி மு க காங்கிரஸ் கை பாவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை