உள்ளூர் செய்திகள்

சினிகடலை

பட வாய்ப்புகள் 'கிர்ர்'சிலர் திரைப்படங்களில் மட்டுமே, ஜொலித்து, காணாமல் போவார்கள். ஆனால் நடிகை பிரியா ஷடமர்ஷன். பீமா திரைப்படத்தில், 'துனியா' விஜயுடன் நடித்துள்ளார். இவருக்கு எவ்வளவு கைத்தட்டல், விசில் சத்தம் கிடைத்ததோ, அதே அளவுக்கு பிரியாவுக்கும் கிடைத்தது. 'பீமா'வில் இவர் ஏற்றிருந்த இன்ஸ்பெக்டர் கிரிஜா கதாபாத்திரத்துக்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சோஷியல் மீடியாவில் இவரது பாலோவர் எண்ணிக்கை, கிடுகிடுவென அதிகரித்துள்ளதாம். நாடக பின்னணி கொண்ட பிரியா, சின்னத்திரையில் அடையாளம் காணப்பட்டவர். நடிப்புடன், உடை வடிவமைப்பாளராகவும் திறமையை வெளிப்படுத்துகிறார். பீமா வெற்றிக்கு பின், பட வாய்ப்புகள் இவரது வீட்டுக்கதவை தட்டுகின்றன.பதற்றத்தில் ரீஷ்மாநடிகை ரீஷ்மா நாணய்யா மிகவும் பதற்றத்துடன் இருக்கிறார். இவரது நடிப்பில் யுஐ, கே.டி. என, இரண்டு படங்கள் திரைக்கு வர தயாராவதே, அவரது படபடப்புக்கு காரணம். உபேந்திரா, துருவா சர்ஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். யுஐ படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ளன. கே.டி., படத்தின் உரையாடல் பகுதி முடிந்துள்ளது. தற்போது பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி உட்பட, நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எனவே இரண்டு படங்களையும் ரீஷ்மா ஆவலோடு எதிர்பார்க்கிறார்.ஒன்பது பாடல்கள் கன்னடத்தில் சில வெற்றி படங்களை தயாரித்தவர் ரவி ஸ்ரீவத்சா. இவர் தற்போது கேங் ஆப் யுகே திரைப்படத்தை தயாரிக்கிறார். 2018ல் உருவான கதை. நடப்பாண்டு ஏப்ரலில் படப்பிடிப்பை துவக்கினர். கடந்த வாரம் படப்பிடிப்பு முடிந்தது. திரைக்கு கொண்டு வர தயாராகின்றனர். சமீபத்தில் டைட்டில் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. பாகல்கோட்டின், பில்லாரி நீர் வீழ்ச்சியில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. படத்தில் ஒன்பது பாடல்கள் உள்ளன. சாதுகோகிலா இசை அமைத்துள்ளார்.ஒரே ஒரு சண்டைபொதுவாக திரைப்படங்களில், அதிகமான பாடல்கள், சண்டை காட்சிகள் இருந்தால்தான், ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற கருத்து உள்ளது. ஆனால் நல்ல கதைக்கரு இருந்தால் போதும் என்பதை, பல படங்கள் நிரூபித்துள்ளன. கேதார் நாத் குரி பாரம் திரைப்படம் இம்மாதம் 27ம் தேதி, மாநிலம் முழுதும் திரையிடப்படுகிறது. இதில் ஒரு பாடல், ஒரு சண்டைக்காட்சி மட்டும் உள்ளதாம். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கூடியது என, படக்குழுவினர் கூறியுள்ளனர். கிராமிய பின்னணி கொண்ட நகைச்சுவை படம். சக்லேஸ்புரா, மாகடி, சாவனதுர்காவில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மடநுர் மனு, ஷிவானி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.பழைய பெங்களூரு ஒரு காலத்தில் நிழலுலக தாதாவாக, போலீசாருக்கு தலைவலியாக இருந்தவர் ஜெயராஜ். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு, ஜான்டி சன் ஆப் ஜெயராஜ் என்ற படம் திரைக்கு வருகிறது. ஜெயராஜை பற்றி கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து, இயக்குனர் அனந்த ராஜ் திரைக்கதை எழுதியுள்ளார். அவரது அம்மா சென்டிமென்ட், காதல், நட்பு என, அனைத்து அம்சங்களும் உள்ளன. ஜெயராஜின் மகன் அஜித், படத்தின் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஜோடியாக நிவிஷ்கா பாட்டீல் நடித்துள்ளார். பழைய பெங்களூரை பார்க்க விரும்பினால், இந்த படத்தை பாருங்கள் என, படக்குழுவினர் கூறுகின்றனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.காமெடிக்கு முக்கியத்துவம்நகைச்சுவை நடிகர் கோமல் நடிப்பில், யலாகுன்னி திரைப்படம் திரைக்கு வருகிறது. இவர் நடிக்கும் படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் டீசர் வெளியானது. மூத்த வில்லன் நடிகர் வஜ்ரமுனி கெட்டப்பில் கோமல் தென்படுகிறார். வஜ்ரமுனி, ஸ்ரீ கிருஷ்ணர் என, பல்வேறு அவதாரங்களில் கோமலை பார்க்கலாம். இதுவரை இவர் நடித்திராத, மாறுபட்ட கதையாம். அனுசூயா கோமல்குமார், சஹனா மூர்த்தி இணைந்து, இப்படத்தை தயாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை