உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்பு: இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்

அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்பு: இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்

புதுடில்லி: அனைத்திந்திய இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. என்னை எதிர்ப்பவர்கள், வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என இமாம் உமர் அகம்மது இலியாசி கூறியுள்ளார். கடந்த 22 ம் தேதி அயோத்தி ராமர் கோயில் ராம பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிக குருக்கள், மடாதிபதிகள், மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை கவுரவமாக ஏற்று பலரும் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் முக்கிய நிர்வாகிகளும் அடங்குவர். அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகம்மது இலியாசியும் பங்கேற்றார்.

அன்பின் அடையாளம்

விழாவில் கலந்து கொண்ட நாள் முதல் பல்வேறு மிரட்டல் போன் கால் வருவதாகவும், சமூக வளைதளங்களில் கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளதாக இமாம் கூறியுள்ளார். ' எனக்கு அதிகம் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. ராமர் கோயில் பிரதிஷ்டை என்பது தேசத்தில் ஒரு முக்கிய நிகழ்வு. பங்கேற்பது குறித்து நான் 2 நாட்களாக யோசித்து முடிவு எடுத்தேன். அன்பின் அடையாளமாக சென்றேன். நான் எந்தவொரு குற்றச்செயலும் செய்யவில்லை.

பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்

இது இந்த தேசத்திற்காக, மனிதநேயத்திற்கானது. இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்த தேசத்தை மதிப்பவர்கள், என்மீது அன்பு செலுத்துபவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாமல் என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும். நாம் அனைவரும் இந்தியாவில் வசிக்கிறோம். அனைவரும் இந்தியர்களே. இந்தியாவை வலிமை படுத்த ஒன்று பட்டு இருக்க வேண்டும். தேசமே அனைத்திற்கும் மேலானது. இவ்வாறு இமாம் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Rajagopal
ஜன 30, 2024 21:47

இந்தியாவில் இருக்கும் நல்ல மனது படைத்த, முதிர்ச்சியுள்ள இஸ்லாமியர்கள் தங்களது மதத்தின் பெயரைக்கெடுக்கும் வெறியாளர்களிடமிருந்து தங்களை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும். பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நம் நாட்டில் நல்லவர்கள். நமது அப்துல் கலாம் போன்ற எண்ணமுடைய பல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் சென்று அங்கே மத வெறியர்களாக மாறிய பலர் இன்று இந்தியாவில் வேண்டுமென்றே முஸ்லிம்களையும் மற்றவர்களையும் பிரித்து ஆதாயம் தேட முயல்கிறார்கள். இந்த மாதிரி வெறியர்களை இஸ்லாமியர்களே பிடித்து விரட்டினால் நாட்டுக்கும் நல்லது. உலகத்துக்கும் நல்லது. இஸ்லாமிய மத வெறியர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படவேண்டும். அவர்கள்தான் பாகிஸ்தானை உருவாக்க காரணமாக இருந்தவர்கள்.


பேசும் தமிழன்
ஜன 30, 2024 20:25

தேசமே அனைத்திற்கும் மேலானது... இதை என்று அனைவரும் உணர்கிறார்கள்.... அன்றைக்கு... மத நல்லிணக்கம்.... சகோதரத்துவம் எல்லாம்... தானாக வளரும்.


பேசும் தமிழன்
ஜன 30, 2024 20:21

மார்க்க ஆட்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.... அதனால் தான் மாற்று மதத்தை மதித்து சென்று இருக்கிறார்.... அதற்காக அவருக்கு கொலை மிரட்டல் !!! என்னத்தை சொல்ல... திருந்துங்கப்பா.


DVRR
ஜன 30, 2024 17:02

இந்த காரியத்துக்கு (ராமர் கோவில் சென்றதற்கு) உடனே இமாம் முல்லா இவர்களிடமிருந்து பட்வா வந்திருக்கணுமே உங்களுக்கு வரவில்லையா என்ன???


நரேந்திர பாரதி
ஜன 30, 2024 16:47

"நாம் அனைவரும் இந்தியாவில் வசிக்கிறோம். அனைவரும் இந்தியர்களே. இந்தியாவை வலிமை படுத்த ஒன்று பட்டு இருக்க வேண்டும். தேசமே அனைத்திற்கும் மேலானது. "... பெரும்பான்மையான முஸ்லீம் பெருமக்கள் இந்த மனநிலைக்கு மிக விரைவில் வந்தால் அவர்களுக்கு நல்லது


sonki monki
ஜன 30, 2024 14:54

மூர்க்கனிடம் தொடர்பெ இருக்க கூடாது முடிந்தவரை அவன் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜன 30, 2024 14:32

வழக்கமா இந்தியன், தமிழன் இந்த மாதிரி பேர்களில் எழுதுறவங்க காணோமே ?? ஏன் ??


RAMAKRISHNAN NATESAN
ஜன 30, 2024 14:21

மத நல்லிணக்கம் பேசும் கடைசி ஹிந்துவுக்கும் ஆபத்து ......


T. Sivaraj
ஜன 30, 2024 14:10

அமைதி மார்க்கத்தில் நூற்றுக்கு தொண்ணுற்றியெட்டு சதவீதம் நாட்டிற்கு எதிரான தீவிரவாத சிந்தனை உள்ளவர்களாகவே உள்ளனர். மீதி இரண்டு சதவீதம் பேர் தானுண்டு தன்குடும்பமுண்டு என்று எந்த வம்புக்கும் போகாமல் உள்ளனர். என்று அவர்கள் மதத்தை விட மனிதம் பெரிது என்று உணருகிறார்களோ அன்றுதான் நமது நாட்டில் மதநல்லிணக்கம், சகோதரத்துவம் மலர வாய்ப்பிருக்கிறது.


பாரதி
ஜன 30, 2024 13:34

இப்போதும் கூட, திராவிட களிமண் தலையர்களுக்கு ஒரு மண்ணும் புரியாது.. தாம் தூம் என தாண்டவம் மட்டும் ஆடுவார்கள்.. ஊழல் செய்ய மட்டும் நன்றாக தெரியும்..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை