உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வருக்கு மூட்டு வலி; 2 நாள் நிகழ்ச்சி ரத்து

முதல்வருக்கு மூட்டு வலி; 2 நாள் நிகழ்ச்சி ரத்து

பெங்களூரு; மூட்டு வலி காரணமாக, முதல்வர் சித்தராமையா கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.முதல்வர் சித்தராமையா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இடதுகால் மூட்டில் தசைநார் அறுவை சிகிச்சை செய்து இருந்தார். அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நேற்று காலை அவருக்கு வலி ஏற்பட்டது.இதனால், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றார். அவருக்கு டாக்டர்கள் 'எக்ஸ் ரே' எடுத்து பார்த்த போது, எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும், வலி குறைய மாத்திரைகள் கொடுத்தனர். இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தினர். பின், அவர் வீட்டிற்கு சென்றார்.சிக்கபல்லாபூர் கவுரிபிதனுார், ராம்நகரின் சென்னப்பட்டணாவில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சிகளில் சித்தராமையா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் மூட்டு வலியால் தனது நிகழ்ச்சிகளை, நேற்றும், இன்றும் முதல்வர் ரத்து செய்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி