உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை

பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் ஸ்டுடியோவில் 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hgfa883y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு, சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கு குழந்தைகள் தேர்வும் இங்கு நடத்தப்பட்டது. இந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்த ரோஹித் ஆர்யா என்ற நபர் பல குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக இன்று ( அக்.,30) மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.பாத்ரூம் வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்து குழந்தைகளை மீட்டனர். ரோஹித் ஆர்யாவிடம் இருந்து ஏர்கன் மற்றும் சில ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நடந்தது என்ன

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரோஹித் ஆர்யா, குறிப்பிட்ட அந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்தவர். ஒரு யுடியூப் சேனலையும் நடத்தி வந்தார். குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த ரோஹித் ஆர்யா, 'தன்னுடைய கோரிக்கை என்ன என்பதை கேட்க வேண்டும். இல்லையெனில் நிலைமை மோசமாகிவிடும். பணம் தனது நோக்கம் அல்ல' என வீடியோ வெளியிட்டு இருந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ரோஹித் ஆர்யா கொல்லப்பட்ட நிலையில், பிணைக்கைதியாக குழந்தைகளை பிடித்து வைக்க என்ன காரணம் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
அக் 30, 2025 21:30

அரசின் கான்ட்ராக் வேலை செய்ததற்கு அரசு பணம் கொடுக்கவில்லை என்று இரண்டுமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருப்பினும், எந்த உத்தரவும் அரசிடமிருந்து வரவில்லை என்ற உச்சகட்ட விரக்தியில் அப்பாவி குழந்தைகளை பலிகடா ஆக்கநினைத்துள்ளது மிக மிக கொடூரமானது. வக்கிரம் நிறைந்தது. இவருக்கு ஏற்பட்டது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.


rama adhavan
அக் 30, 2025 21:23

எதற்கு பிரேத பரிசோதனை எல்லாம். கூறு கூறாக வெட்டி காட்டில் வீசவும். இந்த மிருகத்தை மிருகங்களுக்கு உணவாக்கவும்.


pakalavan
அக் 30, 2025 21:17

மக்களுக்கு பாதுகாப்பில்லை


KRISHNAN R
அக் 30, 2025 20:07

மறை கழண்டு போனது


MUTHU
அக் 30, 2025 19:47

பாலியல் குற்றம் தமிழ்நாட்டுல ஒன்னும் நடக்கலியோ.


RK
அக் 30, 2025 19:45

இந்த குற்ற செயலுக்கு சரியான தண்டனைதான். யாரும் இனிமேல் இதுபோல் விளையாட்டிற்கு கூட செய்ய மாட்டார்கள்.


Rathna
அக் 30, 2025 19:35

மன நலம் சரி இல்லாதவராக இருப்பதால் முட்டியில் அல்லது இடுப்பிற்கு கீழ் சுட்டு பிடித்து இருக்கலாம். ஒரு உயிர் போய் விட்டது.


spr
அக் 30, 2025 18:47

எந்தக் காரணத்துக்காகச் சுட்டாலும் அது சரியே. அவர் எதனால் அப்படிச் செய்தார் என்று விசாரணை செய்யட்டும். சில நேரங்களில் நல்லவர்கள் கூட தண்டிக்கப்பட்டாலும், அடுத்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் கொஞ்சம் தயங்குவர் அவர் குழந்தைகளை பிணைக்கைதியாக அடைத்து வைத்திருந்தார் என்பது உறுதியாகிவிட்டது மேற்கொண்டு விசாரணை தீர்ப்பு என்றெல்லாம் கொண்டு போனால் மன நிலை சரியில்லாதவர் என்று வாதாடி அவரை விடுதலை செய்ய முயற்சிப்பார்கள்


Abdul Rahim
அக் 30, 2025 18:26

மபி யில் நடந்த வியாபம் போல இதிலும் மிகப்பெரிய பாலியல் முறைகேடு நடந்திருக்கிறது வாஷிங் மெஷின் கட்சி எல்லாத்தையும் மூடி மறைத்துவிட்டு நாடகமாடுகிறது.


Field Marshal
அக் 30, 2025 20:07

உங்களுக்கு BJP கட்சியை நினைத்து ஜன்னி வந்திருக்கிறது ..மந்திரிச்சு மயில் இறகால் தலையில் வருட சொல்லுங்கள்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 30, 2025 20:40

மூர்கஸ் சூப்பர்


RAMESH KUMAR R V
அக் 30, 2025 17:55

கடுமையான விசாரணை தேவை. இதன் பின்னணி எதாவது குறித்து ஆராயவேண்டும்.


சமீபத்திய செய்தி