உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லடாக் பாங்கோங் ஏரி அருகே கட்டுமானங்களை உருவாக்கும் சீனா!

லடாக் பாங்கோங் ஏரி அருகே கட்டுமானங்களை உருவாக்கும் சீனா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், பாங்கோங் சோ ஏரி வடக்கு பகுதியில் ஏராளமான உள்கட்டமைப்புகளை சீனா ஏற்படுத்தி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 2020ம் ஆண்டு இந்தியா சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மோதல் ஏற்பட்ட காலகட்டத்தில் லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் பாங்கோங் சோ ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. இதனை இந்திய ராணுவம் முறியடித்ததுடன், அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ஏரியானது கடல் மட்டத்தில் இருந்து 4,270 மீ., உயரத்தில் அமைந்துள்ளது.இந்நிலையில், இந்த பகுதியை அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் எடுத்து உள்ளது. அந்த புகைப்படத்தின் மூலம் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.இதன்படி, பாங்கோங் சோ ஏரி அருகே 17 ஹெக்டேர் அளவுக்கு சீன கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. 4,347 மீட்டர் தூரம் சாலை அமைத்துள்ளதுடன், கருவிகளையும் அப்பகுதியில் நிறுவி வைத்து உள்ளது.இது தொடர்பாக தட்சசீலா நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் நித்தியானந்தம் கூறியதாவது: இப்பகுதியில் சீனா 100க்கும் மேற்பட்ட கட்டடங்களை எழுப்பி உள்ளது. அதில் குடியிருப்புகள், பெரிய நிர்வாக கட்டடங்கள் அடங்கும். திறந்த வெளி மைதானங்கள், எதிர்காலத்தில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க தேவையான இடத்தையும் சீனா அங்கு ஏற்படுத்தி உள்ளது. ஏரியில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 150 மீ., தூரத்திற்கு ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு வசதியாக நிலத்தை தயார்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.கட்டுமான பணிகள் ஏப்ரல் மாதம் துவங்கி உள்ளதாகவும், இந்த பகுதியை நிர்வாகம் மற்றும் நடவடிக்கை மண்டலம் என இரண்டாக பிரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் ஒன்று அல்லது இரண்டு மாடி கொண்ட கட்டடங்களுடன் அருகில் 6 அல்லது 8 பேர் தங்கும் வகையிலான வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SANKAR
அக் 15, 2024 15:28

somebody inform how far away from common border these constructions are.Is it inside disputed territory?


Kasimani Baskaran
அக் 15, 2024 05:41

இந்தியா ஏற்படுத்திய உள்க்கட்டமைப்பு சீனாவை பயப்பட வைத்துள்ளது. முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பி ஆர் ஓ மூலம் செல்ல முடியாத பல பகுதிகளுக்குக்கூட சாலை அமைத்து தளவாடங்களை எளிதில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார்கள். அது மட்டுமல்ல அதி நவீன போர் விமானங்கள் / ஏவுகணைகள் அங்கு தயார்.


Raj S
அக் 14, 2024 22:03

அதே போல இந்தியாவும் என்ன செய்யுதுனு சொல்லலாம்... ஆனா அது ரகசியம் போல... எல்லா நாடும் இதுமாதிரி செய்யறது ஒன்னும் புதுசு இல்லையே...


GMM
அக் 14, 2024 21:59

சீனா நாட்டின் நில பரப்பு ஏராளம். அதனை காலியாக போட்டுவிட்டு அடுத்தவர் பூர்விக, பட்டா இடத்தில் திராவிடர் / மத சிறுபான்மையோர் வலு மூலம் குடியிருப்பது போல் உள்ளது சீனா செய்கை.? சீனா பிறர் பூமியை ஆக்கிரமிக்க அதிகம் முதலீடு செய்து வருகிறது. பாதுகாத்து பராமரிக்க பணம் இருக்காது. சீனா மக்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் நாள் விரைவில் வரும். தொழில் நுட்பம் உலகை உடனுக்குடன் காட்டி வருகிறது. தனி மனித அடக்குமுறை நிலைக்காது. சீனா கம்யூனிஸ்ட் வீழ்ச்சி அடையும்.


Constitutional Goons
அக் 14, 2024 21:18

இப்படி கூவிக்கொண்டு இருப்பதால் என்ன பயன் ? அனைத்தையும் தகர்க்கவேண்டியதுதானே?


T.sthivinayagam
அக் 14, 2024 20:58

பொறுப்பேற்று உள்துறை அமைச்சரை பதவிவிலக சொல்வது சரியல்ல


Ramesh Sargam
அக் 14, 2024 20:17

இந்திய ராணுவம் உடனடியாக செயல்பட்டு அந்த கட்டுமானங்களை அகற்றவேண்டும். அங்குள்ள சீன வீரர்களை அவர்கள் நாட்டிற்கு. அடித்து துரத்தவேண்டும்


முக்கிய வீடியோ