உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாது: பலாத்கார வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாது: பலாத்கார வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லியில், பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைதான சமூக வலைத்தள பிரபலத்துக்கு, இடைக்கால ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், 'ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாது எனவும் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை அல்ல' எனவும் கருத்து தெரிவித்தது.டில்லியைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலம், 23, மீது, துணிக்கடை நடத்தும் பெண், 40, பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: கடந்த, 2021ல் சமூக வலைதளம் வாயிலாக, அறிமுகமான அந்த பிரபலத்திடம், என் ஆடை வியாபாரத்துக்கு விளம்பரம் செய்யுமாறு கேட்டேன். விளம்பரம் தயாரிக்க, 'ஐ போன்' தேவை என கேட்டதால், ஜம்முவில் உள்ள 'ஆப்பிள் ஸ்டோர்' வாயிலாக, 'ஐ போன்' வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அந்த போனை விற்க முயன்றதால் பிரச்னை ஏற்பட்டது. இதனால், என்னிடம் மன்னிப்பு கேட்டு 20,000 ரூபாயை தந்தார்.பின்னர், டில்லி கன்னாட் பிளேஸ் பகுதிக்கு என்னை அழைத்த அவர், இனிப்பில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். பிறகு, டில்லியில் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, மீண்டும் என்னை பலாத்காரம் செய்ததோடு, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினார். இரண்டரை ஆண்டுகளாக, ஜம்முவுக்கு என்னை அழைத்துச் சென்று மிரட்டி, பலாத்காரம் செய்தார்.இவ்வாறு அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பலாத்காரம், பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிந்து, அந்த பிரபலத்தை கைது செய்தனர். சிறையில் 9 மாதங்களாக இருக்கும் அவருக்கு, டில்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு, இடைக்கால ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டது. அப்போது டில்லி போலீசாருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி, மிகக் கடுமையான கருத்துகளை தெரிவித்தனர். அதன் விபரம்:எந்த அடிப்படையில் 376வது பிரிவின் கீழ் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது? ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது. பாதிக்கப்பட்டவர் குழந்தையல்ல; 40 வயது பெண். இருவரும் ஒன்றாக ஜம்மு சென்ற நிலையில், எதற்காக, பலாத்கார பிரிவில் வழக்கு? மனுதாரருடன், இந்த பெண், ஏழு முறை ஜம்மு சென்றிருக்கிறார்; பெண்ணின் கணவருக்கும் அதுபற்றி எந்த கவலையும் இல்லை.ஒன்பது மாதங்களாக சிறையில் இருந்தும் இன்னமும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. எனவே, இது, இடைக்கால ஜாமின் வழங்க தகுதியான வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவரை, விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும். ஜாமினை, அவர் தவறாக பயன்படுத்தக் கூடாது; அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சிக்க கூடாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மே 29, 2025 12:22

உனக்கு 23 ... எனக்கு 40 ....


Narayanan
மே 29, 2025 10:08

இனி எந்த குற்றவாளிகளும் கவலைப்படவேண்டாம். எந்த நீதிமன்றம் உங்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னாலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படும். அதற்கான விலையும் நீங்கள் கொடுக்கவேண்டும். இதுதான் இன்றைய உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாத்திரமே சட்டத்தை முழுவதும் கரைத்துக்குடித்து இருக்கிறார்கள்.


Varadarajan Nagarajan
மே 29, 2025 09:27

ஒருவரை பழிவாங்கவேண்டுமென்றால் பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, ஜாதியை குறித்து இழிவாகப்பேசுதல், வரதட்ஷணை கொடுமை, போதைப்பொருள் கடத்தல், குண்டர் சட்டம் போன்ற சில பிரிவுகளை பயன்படுத்துதல் நிறைய வழக்குகளில் நடந்துள்ளது. அவற்றிற்கு சில சமயங்களில் நீதிமன்றங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தும் இருக்கின்றன. விவசாய நிலத்தை கையகப்படுத்தி விமானநிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை, ஆளும்கட்சி பற்றி விமர்சனம் செய்தால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குண்டர் சட்ட பிரிவில் வழக்கு போன்றவையும் நடந்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதியின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு ஆணுடன் பலமுறை ஒரு பெண் வெளி ஊர்களுக்கு சுற்றுகிறார். பல இடங்களில் தங்குகிறார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து பலமுறை பலாத்காரம் என புகார் அளிக்கின்றார். எந்தஒரு பெண்ணுக்கும் விருப்பம் இலையெனில் எப்படி ஒரு ஆணுடன் பலமுறை வெளியில் சுற்றமுடியும். மிரட்டி பணியவைத்தார் என்றால் இது சாத்தியமா?


அப்பாவி
மே 29, 2025 08:23

இவிங்க முதுகில் ஒரு கையால் தட்டிப் பாத்து சத்தம் வருதான்னு பாக்கலாமே.


Anbuselvan
மே 29, 2025 07:53

வர வர அரசியல்வாதிகள் போல ஆகி விட்டார்கள். இந்த வழக்கில் இந்த நீதிமன்றத்திற்கு இருபாலினரும் சம்மதித்துதான் நடந்து இருக்கிறது என தீர்ப்பை வழங்கி இருக்கலாம். இதே போலதான் இவர்கள் ஆளுனப்பிருக்கும் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத காலக்கெடு விதித்தார்கள். மக்கள் பிரதிநிதிகள் தான் சட்டத்தை இயற்ற முடியும் என அம்பேத்கர் கூறியது இவர்களுக்கு எப்படி தெரியாமல் போயிற்று? வேண்டும் என்கிற இடத்தில் எல்லாம் காலக்கெடுவை அரசியலமைப்பு சட்டத்தில் சொன்ன அம்பேத்கர் அவைகளை விட இவர்கள் சிறந்தவர்களா?


PR Makudeswaran
மே 29, 2025 10:07

மக்கள் பிரதிநிதிகள் ?? 51% அறிவு குறைந்த பிரதிநிதிகள். சட்டம் ஒகே. ஆனால் அறிவுபூர்வமாக இருக்காதே? முன்பு பெர்னார்ட் ஷா சொன்னாரே? அறிவில்லாத பெரும்பான்மை ஆளுமை ஆகிவிடும்.


ஜெகதீசன்
மே 29, 2025 07:50

யதார்த்தமான உண்மை. சரியான கருத்து.


GMM
மே 29, 2025 07:48

பலாத்காரம், தீண்டாமை, வரதட்சணை கொடுமை போன்ற வழக்குகளில் பழி வாங்கும் முறை அதிகம். இதனை போலீஸ் விசாரிக்கும் முன் கலெக்டர் நிர்வாக விசாரணை அறிக்கை அவசியம். முக்கிய நிர்வாக அதிகாரிகள் பணி தான் இவை. போலீஸ் விசாரணை என்றால் வக்கீலுக்கு தேவை வரும். பணத்திற்கும் தேவை வரும். வழக்கின் குறைபாடுகள் மறைத்து, தவறான வழக்கு பதிந்த போலீஸ் மீது மன்றத்தின் என்ன நடவடிக்கை?


Manaimaran
மே 29, 2025 07:23

மிகவும் சரி அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும். தடை போடுவதுக்கு இந்த கருத்து சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை