உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.எம்.ஸ்ரீ பள்ளி சேர்க்கை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

சி.எம்.ஸ்ரீ பள்ளி சேர்க்கை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

புதுடில்லி:டில்லி அரசின், 'சி.எம்.ஸ்ரீ' பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனுமதிச் சீட்டை, 10ம் தேதி வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லி அரசின் கல்வி இயக் குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய அரசின், 'பி.எம்.ஸ்ரீ' பள்ளிகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள டில்லி அரசின், 'சி.எம்.ஸ்ரீ' பள்ளி திட்டத்தின் கீழ், 6,7, மற்றும் எட்டாம் வகுப்புகளில் அரசுப் பள்ளி, டில்லி மாநகராட்சி பள்ளி, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் பள்ளி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா ஆகியவற்றில் மாணவ - மாணவியர் சேர்க்கப்படுவர். இதற்கான நுழைவுத் தேர்வு இன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஒத்தி வைக்கப்பட்டது. சி.எம்.ஸ்ரீ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வரும் 13ம் தேதி நடத்தப்படும். இதற்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை 10ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொது விழிப்புணர்வு, மனத் திறன் மற்றும் எண் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்வு நடத்தப்படும். பொதுக் கல்வியை வலுப்படுத்த டில்லி அரசின் சி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கு, 2025- - 2026ம் நிதியாண்டு பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி